உக்ரைன் மக்கள் போரின் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என விரும்புகின்றனர்.
உக்ரைன் நகரத்தில் உள்ள மக்கள் போரினால் அவசரமாக புதைக்கப்பட்ட உடல்களை முறையான இறுதிச் சடங்கு செய்வதற்காக தோண்டி எடுக்கின்றனர்.
கிழக்கு உக்ரேனிய நகரமான Rubizhne-வில் உள்ள மக்கள், சண்டையின் உச்சத்தில் முற்றங்களில் அவசரமாக புதைக்கப்பட்ட உடல்களை தேடித்தேடி தோண்டி எடுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களை முறைப்படி அடக்கம் செய்து கண்ணியத்துடன் ஓய்வெடுக்க செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இவ்வாறு செய்கின்றனர்.
PC: REUTERS/Alexander Ermochenko
ரூபிஸ்னே உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியின் ஒரு பகுதியாகும், அங்கு ரஷ்யப் படைகள் ஜூலை தொடக்கத்தில் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தின.
50,000 மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே மண்வெட்டிகளுடன் ஆண்கள் வெள்ளிக்கிழமை மண்ணை அகற்றி சடலங்களை தோண்டி எடுக்க ஆரம்பித்தனர்.
PC: REUTERS/Alexander Ermochenko
கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யாவின் பினாமிகளில் ஒன்றான ரஷ்ய ஆதரவு பெற்ற லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு (LPR) உடல்களைத் தேடுவதை ஒருங்கிணைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஆர் அதிகாரியான அன்னா சொரோகினா, ஒரு குழு ரூபிஸ்னேவில் 10 நாட்களாக பணியாற்றி வருவதாகவும், 104 செட் எச்சங்களை (200-க்கும் மேற்பட்ட உடல்கள்) தோண்டி எடுத்ததாகவும் கூறினார்.
நகரத்தில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இதுபோன்று இருப்பதாக மதிப்பிடபட்டுள்ளது. தோண்டி எடுக்கப்படும் உடல்கள் சிதைவடைந்தும், காயங்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றனர், மேலும் துப்பாக்கி குண்டு காயங்களும் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
PC: REUTERS/Alexander Ermochenko
மோசமாக சேதமடைந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகாமையில் மொத்தம் ஆறு உடல்கள் தோண்டப்பட்டு, நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதற்கு வேனில் வைக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது
அறியப்படாத சடலங்களை அடையாளம் காண உதவும் வகையில் மரபணுப் பொருட்களின் எடுத்துக்காட்டுகள் சேமிக்கப்படும் என்று தெற்கு ரஷ்ய பிராந்தியமான ரோஸ்டோவைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் 44 வயதான போரிஸ் கோவலியோவ் கூறினார்.
PC: REUTERS/Alexander Ermochenko
PC: REUTERS/Alexander Ermochenko