சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 27 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான போலீஸ் விருதுகள் தமிழகத்தில் கூடுதல் டிஜிபி (நிர்வாகம்) கி.சங்கர், ஐ.ஜி. (நுண்ணறிவு பிரிவு – உள்நாட்டு பாதுகாப்பு) சி.ஈஸ்வரமூர்த்தி, சேலம் மாநகரதுணை ஆணையர் ம.மாடசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான போலீஸ் விருதுகள், தமிழ்நாடு காவல் துறையில் 24 பேருக்கு வழங்கப்படுகின்றன. விருது பெறுவோர் விவரம்.

சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா, சென்னை குற்றப் புலனாய்வு எஸ்.பி-2 ஜா.முத்தரசி, சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு-1 துணை ஆணையர் ஜி.நாகஜோதி, காஞ்சிபுரம் எஸ்.பி.டாக்டர் ம.சுதாகர், வெளிநாடு வாழ்இந்தியர் பிரிவு எஸ்.பி. சண்முகபிரியா, சென்னை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு எஸ்.பி. (மேற்கு சரகம்) ஏ.மயில்வாகனன், சென்னைகுற்றப் புலனாய்வு (தனிப்பிரிவு) எஸ்.பி-2 ச.சரவணன், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புகூடுதல் எஸ்.பி. (புதுக்கோட்டை)பா.ராஜேந்திரன், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு (இணையதளம்) உதவி ஆணையர் கோ.வேல்முருகன், சென்னை டிஜிபி அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி சவரிநாதன், சென்னைகுற்றப் புலனாய்வு டிஎஸ்பி (மெட்ரோ-2) த.புருஷோத்தமன், சென்னை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ஜெயதுரை ஜான் கென்னடி, தாராபுரம் உட்கோட்ட டிஎஸ்பி ரா.தனராசு, சென்னை குற்றப் புலனாய்வு (சிறப்பு பிரிவு) டிஎஸ்பிகே.கவுதமன், சேலம் மாநகர உதவிஆணையர் (நுண்ணறிவு பிரிவு)தி.சரவணன், தக்கலை ஆய்வாளர் மா.சுதேசன், சென்னை யானைக்கவுனி ஆய்வாளர் த.வீரகுமார் (தற்போது துறைமுகம் உதவி ஆணையர்), சென்னை குற்றப் புலனாய்வு (பாதுகாப்பு பிரிவு) ஆய்வாளர் சா.சுப்புரவேல், திருநெல்வேலி ஊழல் தடுப்பு, கண்காணிப்பு ஆய்வாளர் தி.ராபின் ஞானசிங், மதுரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு ஆய்வாளர் த.சூரியகலா, ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை-5 காவல் ஆய்வாளர் எஸ்.பவுல் பாக்கியராஜ், சென்னை குற்றப் புலனாய்வு (தனிப் பிரிவு) உதவி ஆய்வாளர் நா.வெங்கட சுப்பிரமணியன், தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி உதவிஆய்வாளர் செல்வராஜ், சென்னைஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை(நகரம் 3) சிறப்பு உதவி ஆய்வாளர் தா.அந்தோணி தங்கராஜ் ஆகியோர் விருது பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.