75வது சுதந்திர தினம்.. சென்னையில் 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு.. அனைத்து அமைச்சர்கள் பங்கேற்பு.!

நமது நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 

நமது நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மண்டலத்தை சேர்ந்த 33 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில் சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். அதன்படி,

தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசாமி கோவில் – சபாநாயகர் மு.அப்பாவு‌.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் – கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் – பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் – இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின்.

 எம்.எல்.ஏ., வடபழனி முருகன் கோவில் – தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்.

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவில் – மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

தம்பு செட்டித் தெரு காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் – வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்.

ராயப்பேட்டை சித்தி புத்தி வினாயகர் கோவில் – கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி.

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் – குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

தங்க சாலை தெரு ஏகாம்பரேசுவரர் கோவில் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் – பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

வில்லிவாக்கம் சவுமிய தாமோதரபெருமாள் கோவில் – அரசு தலைமை கொறடா கோவி.செழியன்

 பெசன்ட் நகர் மகாலட்சுமி கோவில் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.

கீழ்ப்பாக்கம் பாதாளபொன்னியம்மன் கோவில் – சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்.

பூங்காநகர் கந்தசாமி என்ற முத்துக்குமாரசுவாமி கோவில் – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.

சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் கோவில் – சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

 சென்னை அரண்மனைக்காரன் தெரு கச்சாலீசுவரர் கோவில் – செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

 திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் – வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

 நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் – போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

சென்னை தேவராஜ முதலி தெரு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவ பெருமாள் கோவில் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் – சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்.

கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை சக்திவிநாயகர் கோவில் – வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி.

மேற்கு தாம்பரம் செல்வவிநாயகர்,கோதண்டராமர் கோவில் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பாடி திருவல்லீஸ்வரர் கோவில் – உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

 அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவில் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அடையாறு அனந்தபத்மநாப கோவில் – நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.

பள்ளியப்பன் தெரு அருணாச்சலேசுவரர் கோவில் – துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி.

அயன்புரம் பரசுராம லிங்கேஸ்வரர் கோவில் – தகவல்தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்.

 திருவட்டீஸ்வரன்பேட்டை திருவட்டீஸ்வரர் கோவில் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.