பிரபல தொழிலதிபர் மற்றும் பங்குச்சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நேற்று காலமானார் என்ற செய்தி இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது.
பிரதமர் மோடி, டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்பட பல தொழில் அதிபர்கள் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பங்கு மார்க்கெட்டில் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என கூறப்பட்டது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு.. ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்?
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
இந்த நிலையில் இந்தியாவின் வாரன் பஃபெட் என்று போற்றப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சுமார் 5 பில்லியன் சொத்து மதிப்பை வைத்துள்ளார் என்றும் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் அவர் முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
அவரது பங்கு சந்தை கணிப்பு மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் அதனால்தான் அவர் இந்தியாவின் வாரன் பஃப்பட் என்று போற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டாடா மோட்டார்ஸ், டைட்டன் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அவரது விருப்பத்திற்குரிய பங்குகளாக இருந்தன.
திரைப்பட தயாரிப்பாளர்
இந்த நிலையில் பல நிறுவனங்களில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்த நிலையில் மூன்று திரைப் படங்களையும் தயாரித்துள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதேவி-அஜித் படம்
கடந்த 2012ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற திரைப்படத்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தயாரித்தார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிகை ஸ்ரீதேவி 15 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் தான் அவர் மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தில் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். மேலும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுனில் லுல்லா, ஆர் பால்கி மற்றும் ஆர்கே தமானி ஆகியோர் இருந்தனர் என்பது பலர் அறிந்ததே.
அமிதாப்-தனுஷ் படம்
அதேபோல் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த ‘ஷமிதாப்’ இந்த திரைப்படத்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த 2015ஆம் ஆண்டு தயாரித்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கரீனா கபூர் – அர்ஜுன் கபூர்
மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு கரீனா கபூர் மற்றும் அர்ஜுன் கபூர் நடித்த ‘கி&கா’ என்ற திரைப்படங்களையும் தயாரித்தார். மேலும் ஹங்காமா டிஜிட்டல் மீடியா என்ற பொழுதுபோக்கு நிறுவனம் திரைப்படங்கள், இசை மற்றும் வெப் தொடர்களை தயாரித்து வரும் நிலையில் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது மறைவு தொழில் துறைக்கு மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிற்கும் மிகப் பெரிய இழப்பு என்பது தற்போது தெரியவந்துள்ளது.
Do You Know Rakesh Jhunjhunwala produced these 3 Bollywood movies?
Do You Know Rakesh Jhunjhunwala produced these 3 Bollywood movies? | திரைப்பட தயாரிப்பாளராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா… அஜித், தனுஷ் படங்களையும் தயாரித்து உள்ளாரா?