76-வது சுதந்திர தின விழா:
76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற, மாநில முதல்வர்கள் அவரவர் மாநிலங்களில் தேசியக்கொடியேற்றி உரை நிகழ்த்துவார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசியக்கொடியேற்றுகிறார். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் இன்றுகாலை 9 மணியளவில் தேசியக்கொடியேற்றுவார். காவல்துறை வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைப்பார்கள். அதைத் தொடர்ந்து முதல்வர் சுதந்திர தின விழா சிறப்புரை ஆற்றுவார். பின்னர், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு விருதுகள், நலதிட்ட உதவிகள் வழங்கப்படும்.