ஒரு ஏக்கர் வயல் காணியில் 180 புசல் நெல்லை அறுவடை செய்யக்கூடிய புதிய வகை நெல் இனம் அம்பலாந்தொட்ட அரச நெல் ஆய்வுப்பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பலாந்தோட்டை நெல் ஆய்வு நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷினி சிறிவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில்,
இது AT-378 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது பச்சை அரிசி வகையைச் சேர்ந்ததாகும். மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடியது. ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம்,பொலன்னறுவை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த ரக நெல்லை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.