‘நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையே இவர்கள்தான்‘- குடியரசுத் தலைவர் முர்மு உரை

இந்தியத் திருநாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் ஆகியவற்றிற்காக நம்மாலான அனைத்தையும் அளிக்க உறுதி ஏற்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து 76-ஆவது ஆண்டில் எடுத்து வைக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் 76-ஆவது சுதந்திர தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார். ஜனநாயகத்தின் மெய்யான சக்தியை உலகம் தெரிந்து கொள்ள இந்தியா உதவியிருக்கிறது என்று கூறிய குடியரசுத் தலைவர், இந்திய விடுதலைக்குப் போராடிய அனைவருக்கும் தலை வணங்குவதாகக் குறிப்பிட்டார்.
image
சுதந்திரத்திற்காகப் போரிட்ட பழங்குடியின நாயகர்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பவர்கள் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டில் நாம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை முழுமையாக மெய்ப்பித்திருப்போம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் வியத்தகு சாதனையை இந்தியா படைத்திட உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த குடியரசுத் தலைவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கை தருவதாகவும் குறிப்பிட்டார். நாட்டில் பெண்கள் பல தடைகளை உடைத்து முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட திரெளபதி முர்மு, நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையே அவர்கள்தான் என்றார்.
நமக்கு அனைத்தையும் தந்திருக்கும் நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்திற்காகவும் நம்மாலான அனைத்தையும் தந்து சிறப்பான இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.