புதுமண தம்பதியருக்கு ஒடிசாவில் நூதன பரிசு| Dinamalar

புவனேஸ்வர் : ஒடிசாவில் திருமணம் நடைபெறும் இடங்களுக்கே சென்று, புதுமண தம்பதியருக்கு பரிசுத்தொகுப்பை வழங்க அம்மாநில அரசுதிட்டமிட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நுாதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அந்த பரிசு தொகுப்பில் கருத்தடை மாத்திரை கள், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடும் புத்தகம், திருமணப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவை இடம்பெறும்.இதுபற்றி, மாநில குடும்ப கட்டுப்பாட்டு இயக்குனர் பிஜய் பானிகிரகி கூறுகையில், ”இந்த திட்டம் தேசிய சுகாதார திட்டத்தின் அங்கம் ஆகும். இதன் நோக்கம், புதுமண தம்பதியருக்கு குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.