மங்களூரில் இருந்து 185 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு பீதி கிளம்பியதையடுத்து ரன்வேயில் இருந்த விமானம் நிறுத்தப்பட்டது.
விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவரின் செல்போனில் நீ ஒரு வெடிகுண்டு என்று அவரது தோழி வாட்சப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியை அருகில் இருந்த பெண் பயணி தற்செயலாகப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
இதையடுத்து விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடைபெற்றது. இதனால் 6 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றது.