பிரித்தானியாவில் வறட்சி அறிவிப்பு… பாபா வங்காவின் கணிப்பு நிறைவேறியுள்ளதா?


*கண் பார்வை இல்லாத பாபா வங்கா, இரட்டைக் கோபுர தாக்குதல் உட்பட பல விடயங்களை முன் கூட்டியே துல்லியமாக கணித்தவர்.

*தற்போது உலகம் சந்தித்து வரும் வறட்சி குறித்தும் கணித்துள்ளார் பாபா வங்கா.

கண் தெரியாதவராக இருந்தும் இரட்டைக் கோபுர தாக்குதல் உட்பட பல விடயங்களை முன் கூட்டியே துல்லியமாக கணித்தவர் பாபா வங்கா.

1996இல் அவர் இறந்துபோனாலும், 5079ஆம் ஆண்டு வரையுள்ள விடயங்களை முன்பே கணித்துக் கூறியுள்ளார் பாபா வங்கா.

பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபாவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தினர்.

பிரித்தானியாவில் வறட்சி அறிவிப்பு... பாபா வங்காவின் கணிப்பு நிறைவேறியுள்ளதா? | Mystic Baba Vanga2022 Prophesy Come True

Credit: Wikipedia

அதன் பிறகு தனது கண் பார்வையை இழந்த நிலையில் தனது முதல் கணிப்பை கணித்த பாபா, தான் காணாமல் போனபோது, தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் மற்றும் மற்றவர்களை குணமாக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டில் இரண்டு மோசமான விடயங்கள் நடக்கும் என்று கணித்துள்ளார் பாபா வங்கா. அவற்றில் ஒன்று ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவின் சில பகுதிகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பது.

இந்த ஆண்டின் துவக்கத்தில், அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் வறட்சி அறிவிப்பு... பாபா வங்காவின் கணிப்பு நிறைவேறியுள்ளதா? | Mystic Baba Vanga2022 Prophesy Come True

Credit: EPA

இரண்டாவதாக, பெருநகரங்கள் வறட்சி மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் பாபா வங்கா.

இப்போது உலக நாடுகள் பல தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுளதை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் அதிகாரப்பூர்வமாக வறட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஆக பாபா வங்கா கூறியது உண்மையாகிவிட்டதோ என பலரும் எண்ணத்துவங்கியுள்ளார்கள்.
 

பிரித்தானியாவில் வறட்சி அறிவிப்பு... பாபா வங்காவின் கணிப்பு நிறைவேறியுள்ளதா? | Mystic Baba Vanga2022 Prophesy Come True

Credit: PA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.