இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தற்போது மக்களுக்கு அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தி வருகிறார்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளும் பங்கேறுள்ளனர். செங்கோட்டையில் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு பட்டம், ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/ANI/status/1558997750884499457
https://twitter.com/ANI/status/1558998145350385664
டெல்லி செங்கோட்டைக்கு செல்வதற்கு முன்னதாக காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோதி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றுவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவதற்கு முன்னதாக, பிரதமர் மோதி ட்விட்டரில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் தங்கள் இல்லங்களில் மூவர்ணக் கொடியை ஏந்தி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோதி முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்