185 பயணிகளுடன் புறப்படத் தயாரான விமானம்; தோழியின் வாட்ஸ்அப் செய்தியால் 6 மணிநேரம் தாமதம்!

மங்களூரூ விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அந்த சமயம் பார்த்து விமானத்தில் இருந்த சக பயணி ஒருவரின் செல்போனில் “நீ ஒரு வெடிகுண்டு வீசுபவர்” (You Are A Bomber’) என்று வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியை அருகில் இருந்த பெண் பயணி ஒருவர் தற்செயலாகப் படித்துவிட்டார்.

விமானம்

உடனே அவர் இது தொடர்பாக விமானத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடைபெற்றது. இறுதியில் குறிப்பிட்ட நபரின் தோழியுடனான தனிப்பட்ட உரையாடலில் அவர் மேலே குறிப்பிட்ட வார்த்தையை பயன்படுத்தினார் என்றும், அதில் உள்நோக்கம் இல்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.

கடைசியில் பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பின்னர் 185 பயணிகள் மீண்டும் அதே விமானத்தில் ஏற்றப்பட்டு, 6 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.