ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாத தவணை தொகையானது இனி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டி அதிகரிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது எஸ்பிஐ சில்லறை வாடிக்கையாளர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரூ.6,068 கோடி லாபத்தில் எஸ்பிஐ வங்கி.. வாராக் கடன் அளவு என்ன தெரியுமா..?
வீட்டுக் கடன்
குறிப்பாக வீட்டுக் கடன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஓவர் நைட் விகிதம் – மூன்று மாத எம் சி எல் ஆர் விகிதம் – 7.35%. இது முன்னதாக 7.15% ஆக இருந்தது.
இதே 6 மாத விகிதம் எம் சி எல் ஆர் விகிதம் 7.65% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 7.45% ஆக இருந்தது.
1 – 3 வருடம் எம்சிஎல்ஆர்
1 வருட எம் சி எல் ஆர் விகிதம் – 7.7%, இது முன்னதாக 7.5% ஆக இருந்தது.
2 வருட எம் சி எல் ஆர் விகிதம் – 7.9% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 7.7% ஆக இருந்தது.
இதே 3 வருட எம் சி எல் ஆர் விகிதம் 8% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 7.8% ஆக இருந்தது.
கடந்த மாதமும் அதிகரிப்பு
கடந்த மாதமே அனைத்து கடன்களுக்கான மார்ஜினல் காஸ்ட் ஆப் ஃபண்டுக்கான வட்டி விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கபபட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வட்டி விகிதம் மாறாமல் இருந்த நிலையில், தற்போது வங்கியின் ரெப்போ விகித அதிகரிப்புக்கு பின்னர் வட்டி அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
வட்டி அதிகரிப்பு
கொரோனாவின் வருகைக்கு பின்னர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக, வட்டி விகிதத்தினை தொடர்ந்து பல காலாண்டுகளாகவே மாற்றாமல் வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வட்டி விகிதமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது தான் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
பிக்சட் டெபாசிட்
எஸ்பிஐ அதன் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினையும் சமீபத்தில் அதிகரித்தது. இது 7 நாள் முதல் 10 வருடங்கள் வரையில் உள்ளது. இங்கு வட்டி விகிதம் 2.90% முதல் 5.65% ஆக உள்ளது. இதே மூத்த குடி மக்களுக்கு 3.40% முதல் 6.45% ஆக அதிகரித்துள்ளது.
SBI hikes lending rates on loans from today: EMIs may go up
SBI hikes lending rates on loans from today: EMIs may go up/எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க… இனி இஎம்ஐ அதிகரிக்கலாம்..!