அண்ணாமலை பதவிக்கு சிக்கல்..! சம்பவம் செய்யுமா பாஜக மேலிடம்?

பாஜகவை அதிகம் எதிர்க்கும் தமிழகத்தில் துடிப்பான தலைவனை தேர்வு செய்யும் நோக்கில்தான் அண்ணாமலையை மாநில தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. ஆனால், கடந்த சட்ட மன்ற தேர்தலில் பிரச்சாரத்தின்போது மூத்த அரசியல்வாதியான செந்தில்பாலாஜியை தூக்கிப்போட்டு மிதிப்பேன் என்று காக்கி குணத்தில் இருந்து வெளிவராத அண்ணாமலை பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. பாஜக தொண்டர்களை அது குஷி படுத்தினாலும் மேலிடம் அதை விரும்பவில்லை. சரி போகட்டும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று மேலிடம் நினைத்து வந்த நிலையில் தமிழகத்தில் எதிர்கட்சியாகவே பாஜகவை பேசுமளவிற்கு அண்ணாமலை இழுத்து வந்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து மேடையிலும், பேட்டிகளிலும் பேசி வரும் அண்ணாமலைக்கு காக்கி முகம் வந்து செல்கிறது. ஆவேசமாக பேசவும் செய்கிறார். இதனால் தொண்டர்கள் கருத்து மோதலை மறந்து மெஜாரிட்டியான இடங்களில் பராக்கிரமத்தை காட்டுகின்றனர். வட மாநிலங்களில் அரங்கேறும் அராஜக போக்குகளை தற்போது இங்குள்ள பாஜக தொண்டர்கள் கையில் எடுத்துள்ளனர். அதன் உச்ச கட்ட வெளிப்பாடுதான் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பை எடுத்து வீசியது. மேலும், அந்த வீடியோவில், கொலை வெறியாக அமைச்சரை தேடி திரிவதும், கெட்ட கெட்ட வார்த்தைகளாலும் அமைச்சரை ஒருமையில் பேசியது வட மாநில அராஜகங்களை கண்முன்னே நிறுத்தியது.

தமிழ்நாட்டில் தற்போது பாஜகவுக்கு அங்கீகாரம் முளைத்துள்ள சூழலில் அமைதியை விரும்பும் மாநிலத்தில் தொடக்கத்திலேயே அவப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அண்ணாமலைக்கு மேலிடம் மாற்று பதவி கொடுக்கவும் வாய்ப்புள்ளதாம். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் பேசுகையில், பழனிவேல் தியாகராஜன் மீது பா.ஜ.க வினர் செருப்பு வீசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது காட்டுமிராண்டிதனமான செயல். அமைச்சர் என்றில்லை தனி மனிதன் மீதும் இது போன்ற தாக்குதல் செய்ய கூடாது. கருத்தை கருத்தால் தான் எதிர் கொள்ள வேண்டும். பி.டி.ஆர் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என கூறினார். இதையொட்டி, கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளின் கண்டனங்களையும் மேலிடம் கவனித்து வருகிறதாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.