பஸ் மோதி பள்ளி மாணவி பலி.. சுதந்திர தின விழாவை முடித்து திரும்பிய போது சோகம்..!

பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மாணவி பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை அடுத்துள்ள அஸ்தினாபுரம் – ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த  லக்ஷ்மிஸ்ரீ.

இவர், பள்ளியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சக மாணவியுடன் சாலையோரத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 52H என்ற மாநகர பேருந்து திடீரென மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவி லட்சுமிஸ்ரீ உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தை இயக்கிய ஓட்டுநர் தப்பிச் சென்ற நிலையில் அவரை கைது செய்த போலீசார் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.