வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமிர்தசரஸ்: 75 வது சுதந்திர தின விழாவையொட்டி இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. இதில் நமது வீரர்களின் கம்பீர நடை பார்வையாளர்களை உற்சாகமடைய செய்தது
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் இன்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி உரை நிகழ்த்தினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியான வாகாவில் கொடியிறக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் பெண் கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்கான நடை, கம்பீரத்துடன் பேரணி நடத்துவர்.
இன்று சுதந்திர தினம் என்பதால் இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர் வாகா எல்லை களை கட்டியது
.இருநாட்டு எல்லைகளில் மிக நெருக்கமான எல்லையாக வாகா உள்ளது. நாட்டின் பிற இடங்களில் மலைப்பகுதிகள், சிகரங்களில் எல்லைகள் இருப்பதால் மக்கள் அங்கு சென்று பார்வையிட முடியாது. ஆனால், வாகா எல்லை இந்தியா-பாக்.இடையே சாலை மூலம் இணைக்கும் பகுதியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement