மனித நடவடிக்கைகளினால் காட்டு யானைகள் இறக்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று விவசாய மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக புதிய சட்ட விதிகளை, உரிய சட்டத்தில் விரைவில் உள்ளடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மிஹிந்தலை, புதுக்குளமா கிராமத்தில் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வனவிலங்குகள் திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.