சர்வதேச சந்தையில் பல்வேறு தலைவலிகள் இருந்து வரும் போதிலும், கடந்த வாரத்தில் சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டது. அன்னிய முதலீடானது கணிசமான அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சொல்லப்போனால் இந்திய சந்தையானது கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு பிறகிலிருந்து சுமார் 7% ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த சுதந்திர தின விழாவிற்குள் சந்தையானது நல்ல ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில் 11 பங்குகளையும் வாங்க பரிந்துரை செய்துள்ளனர். அதென்ன பங்குகள்? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ரூ.9 டூ ரூ.3721.. கடனில்லா பார்மா நிறுவனத்தின் சூப்பர் ஏற்றம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
நாரயண ஹ்ருதயலயா
நாரயண ஹ்ருதயலயா கடந்த ஜுன் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ள நிறுவனங்களில் ஒரு நிறுவனமாகும். இதன் இந்திய வணிகம் 2 வது காலாண்டில் மீண்டும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எபிடா விகிதம் 21% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்பங்கின் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ் சந்த் அன்ட் கம்பெனி
இந்த நிறுவனமும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்பங்கின் இலக்கு விலையினை 185 ரூபாயாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இது முன்னதாக 156 ரூபாயாக இருந்தது.
டாடா எல்க்ஸி
டாடா குழுமத்தினை சேர்ந்த இந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போது சர்வதேச அளவில் மின்சார வாகனத் துறையானது மேம்படத் தொடங்கியுள்ள நிலையில், இதன் வளர்ச்சி விகிதம் மேற்கொண்டு அதிகரிக்கலாம். கடந்த ஜுன் காலாண்டிலேயே நல்ல வளர்ச்சியினையும் கண்டுள்ளது. இதற்கிடையில் இப்பங்கினை வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வருண் பேவரேஜ்
கடைசி காலாண்டில் இந்த நிறுவனத்தின் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இந்த நிறுவனம் பெப்சிகோ நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் கார்பனேட் மற்றும் கார்ப்பனேட் அல்லாத பானங்களின் உரிமையாளர் பாட்டிலாகும். இந்த எஃப் எம் சி ஜி நிறுவனம் கடந்த காலாண்டில் 75.08% லாபம் கண்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அடுத்த ஆண்டு இதன் சிஏஜிஆர் விகிதம் 20% அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் ஹோட்டல்ஸ் லிமிடெட்
கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து இந்தியன் ஹோட்டல்ஸ் லிமிடெட் நிறுவனம் நல்ல செயல்பாட்டினை கொண்டுள்ளது. இது நடப்பு ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எபிடா மார்ஜினும் 30% ஆக இருக்கும் நிலையில், கடந்த காலாண்டிலேயே 30% வருவாய் வளர்ச்சியினை கண்டுள்ளது. இது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
லார்சன் டூப்ரோ
லார்சன் டூப்ரோ நிறுவனத்தின் ஆர்டர் விகிதங்கள் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து ஒப்பந்தங்கள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே முதலீடுகளும் அதிகரிக்கலாம் என்ற் நிலையில், இதன் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம். இதற்கிடையில் இப்பங்கின் இலக்கு விலையானது 2125 ரூபாயாக நிபுணர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
மாருதி சுசூகி லிமிடெட்
ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த மாருதி சுசூகி லிமிடெட் நிறுவனம் நல்ல விற்பனையை கண்டு வரும் நிலையில், வரவிருக்கும் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் இலக்கு விலையினை 9700 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.
எஸ்கார்ட்ஸ் குபோட்டா
கமாடிட்டிகளின் விலை சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், இதன் வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்பங்கினை வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் இலக்கு விலையான 2250 ரூபாயாக நிபுணர்கள் செய்துள்ளனர்.
HOEC
இதே HOEC என்ற ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி நிறுவனம், இந்தியாவின் முதல் மிட்கேப் நிறுவனமாகும். இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என்றும், ஏற்கனவே வாங்கியிருந்தால் அதனை ஹோல்டு செய்து வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்..
CFHL
இதே போல CFHL என்ற கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சம்பளதாரர்களுக்கு ஏற்ற சிறிய அளவிலான கடன் விகிதமானது நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வலுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இதனை 634 – 630 என்ற லெவலில் வாங்கலாம், இதன் இலக்கு விலை 754 ரூபாய் வரையில் செல்லலாம் என கணித்துள்ளனர்.
ஏவிடி நேச்சுரல்
ஏவிடி நேச்சுரல் (AVT) நிறுவனம் உலகின் உணவு, பானங்கள், விலங்கு உணவு பொருட்கள், ஊட்டசத்து தொடர்பான இயற்கையான மூலப்பொருட்கள் அடிப்படையிலான முன்னணி உற்பத்தியாளராகும். இப்பங்கினை 90 – 96 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலையானது 124 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளனர்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
These 11 stocks may deliver 20% returns by the next independence day
These 11 stocks may deliver 20% returns by the next independence day/இந்த 11 பங்குகளை வாங்கி வைங்க.. 20% வரை லாபம் கொடுக்கலாம்.. நீங்க எதுவும் வாங்கியிருக்கீங்களா?