நாளாந்த மின்வெட்டு நாளை (16) முதல் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அலகு 01 இல் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்வெட்டு நீடிக்கப்படவுள்ளதாக PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய மின்வெட்டு 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்றும், அதற்கு ஏற்றாற்போல் நாளை முதல் நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நுரோச்சோலையத்தின் முதலாம் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட சிறிய பழுது காரணமாக மின்வெட்டு நீடிக்கப்படவுள்ளதாகவும், இதனை பழுதுபார்க்கும் பணியை முடிக்க சுமார் 14 முதல் 16 நாட்கள் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்ததும் மின்வெட்டு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என ஜானக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் இந்த மின்தடையை உறுதிப்படுத்திய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்நிலையத்தில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த மின் நிலையத்தில் 2-வது அலகில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், 3-வது அலகு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.