சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது பல நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் தலைவலியாக இருந்து வருகின்றது. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த பல்வேறு நாட்டு மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
தற்போது அதன் பலனாக பணவீக்கம் என்பது சரிய தொடங்கியுள்ள நிலையில், வட்டி அதிகரிப்பினால் பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு சர்வதேச நாடுகளிலும் ரெசசன் அச்சம் எழுந்துள்ளது.
E- sharam: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய தளம்.. யாரெல்லாம் எப்படி இணையலாம்.. பயன்..?
இந்தியாவில் தாக்கம்
எனினும் இந்தியாவில் பெரியளவில் தாக்கம் இல்லை என்றாலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்திலும் தாக்கம் இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும் தற்போது வரையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது, உலக நாடுகளில் பாதிக்கப்பட்டளவுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்றுமதி விகிதமானது கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்தியாவில் அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
ஜூலையில் ஏற்றுமதி 2021 பிப்ரவரி 2021க்கு பிறகு மெதுவான வளர்ச்சியினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இடையில் 47% வளர்ந்துள்ளதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட வர்த்தக தரவுகளைக் காட்டுகிறது. உலகளாவிய தேவை மற்றும் அதிகரித்து வரும் வளர்ச்சி என பலவும் சந்தையில் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தான் மைல்கல்லா?
எனினும் இந்தியாவினை விட பல நாடுகள் இன்னும் வேகமான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. 2021ல் 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்கு ஏற்றுமதியினை இந்தியா ஒரு மைல்கல்லாக கூறியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
என்ன செய்யணும்?
2030-க்குள் ஏற்றுமதி இலக்கு 1 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது. அதற்குள் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக வளர்ந்திருக்கும் என்று வைத்துக் கொள்வோம். உலகளாவிய மந்த நிலைக்கு மத்தியில் இந்தியா பின்னடைவை கண்டு வரும் நிலையில், ஏற்றுமதியினை அதிகரிக்க திட்டமிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலை
இந்தியா அதன் ஏற்றுமதியில் பொறியியல் பொருட்கள் 25%மும், பெட்ரோலிய பொருட்கள் 16%மும், , தோல், ஜவுளி மற்றும் ரத்தினங்கள், நகைகள் 32% ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
Will India’s Exports Survive Recession?
Will India’s Exports Survive Recession?/சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?