இந்திய சுதந்திர வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் ஆயுதப்போராளி சேலம் உழவன் அப்பாவு.
வரலாற்று பக்கங்களிலும் பள்ளி கல்லூரி வரலாற்று பாட புத்தகங்களிலும் நம்மை ஆட்சி செய்த மன்னர்களை பற்றி மட்டுமே கற்பித்தும் படித்தும் வரும் நிலையில், கடந்த இரண்டு தலைமுறையினருக்கும் இந்த தலைமுறையினருக்கும் நம் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தேடித் தெரிந்து கொள்ளும் இடத்திலும், புதியது போல தெரிவிக்கும் இடத்திலும் தான் நாம் இருக்கிறோம். அப்படி மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் தான் சேலம் உழவன் அப்பாவு.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் தலை தூக்கிய காலகட்டத்தில் முதல் முதலில் எதிர்த்து வரி செலுத்தக் கூடாது என்று விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை (1792) நடத்தியவர் சேலம் உழவன் அப்பாவு. மக்களின் ஆதரவு பெருகி உழவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சேலம் உழவன் அப்பாவு தலைமையில் மிகப்பெரிய ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த போராட்டம் ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்தது. பின்னர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட சேலம் உழவன் அப்பாவு சேலம் செவ்வாய்பேட்டை எனும் இடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்த மாபெரும் சுதந்திர போராட்ட வீரரை அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM