திரைப்பட விமர்சகரும், மூவி டிராக்கருமான கௌசிக் திடீர் மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் சினிமா பிரிவில் கண்டெண்ட் ரைட்டராக, தொகுப்பாளராக பணியாற்றி வந்த கௌசிக், பிளாக் ரைட்டராக அறியப்பட்டவர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அந்தவகையில் நேற்று மதியம் வரை ட்விட்டரில் அவர் ஆக்டிவாக இருந்திருக்கிறார். கடைசியாக நடிகர் துல்கர் சல்மானின் சீதா ராமம் பட கலெக்ஷன் குறித்தும் அவர் பதிவிட்டிருந்திருக்கிறார். உலகளவில் சீதா ராமம் ரூ.50 கோடி வரை கலெக்ஷன் செய்திருப்பதாக அவர் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் கெளசிக்கின் மரணத்திற்கு பிறகு அவரது அந்த கடைசி ட்வீட்டிற்கு பதில் ட்வீட்டாக நடிகர் துல்கர் சல்மான் `கௌசிக், உங்களின் இந்த மரண செய்தி உண்மையிலேயே மனவேதனை அளிக்கிறது. இது உண்மையாக இருக்கக்கூடாதென்றே நான் விரும்புகிறேன். உங்கள் குடும்பம் இப்போது என்ன மாதிரியான சூழ்நிலையில் இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. நாம் ஒருவரையொருவர் பெரும்பாலும் ட்விட்டர் மூலமாகவும் சில தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவும் அறிவோம். நீங்கள் எப்போதும் எனக்கு மிகுந்த அன்பையும் ஆதரவையும் காட்டி வந்திருக்கின்றீர்கள். வாழ்க்கை மிகவும் சிறியதென்று இப்போது புரிகிறது. நல்ல சினிமாக்களுக்காக எப்போதும் நீங்கள் துணை நின்றிருக்கீர்கள். உங்களுடைய ஊக்கத்திற்கும் அன்புக்கும், என் நன்றி.
@LMKMovieManiac This is truly heartbreaking. I so so wish this isn’t true. I cannot imagine what your family is going through. Kaushik we know each other mostly through Twitter and a few personal interactions. You have always shown me so much love and support
— Dulquer Salmaan (@dulQuer) August 15, 2022
இந்த ட்வீட்களை என்னால் சரியாக கோர்வையாக சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த செய்தி என்னை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளது. தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள்’ என்றார்.
இயக்குநர் மிஷ்கினும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், `செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கௌசிக் நம்மை விட்டு பிரிந்துவிட்டாரா? மிகவும் நல்ல மனிதர், மிகவும் அறிவாளி, எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி எனக்கு எழுகிறது. கௌசிக்கின் குடும்பத்தினரும் நண்பர்களும் எப்படி அவரது இழப்பிலிருந்து வெளியே வருவார்கள் என்று தெரியவில்லை. அவர்களை போல நானும் உன்னை பெரிய அளவில் இழக்கப் போகிறேன்!’ என்றுள்ளார்.
I am shell shocked..Kaushik left us?what a fine chap he was very knowledgeable, passionate and he was warm and kind to everyone..what is the meaning of life?I dont know how his family and friends can come to terms with this loss.I am going to miss you big my dear @LMKMovieManiac pic.twitter.com/Js0nevI4cc
— Mysskin (@DirectorMysskin) August 15, 2022
முன்னதாக பெசன்ட் நகரில் வசித்து வந்த அவர் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்ததாக கூறப்பட்டது. இன்று மதியத்திற்கு மேல் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM