இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை இடைநீக்கம் செய்த FIFA – காரணம் என்ன?

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை இடைநீக்கம் செய்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடைபெறாமல் இருப்பதாகவும், பதவிக் காலம் முடிந்த பின்னரும் தலைமை பொறுப்பில் PRAFUL PATEL தொடர்கிறார் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
image
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும், இந்தநிலை தொடர்ந்தால் மூன்றாம் நபர்கள் தலையீடு எனக் கூறி உரிமம் இடைநீக்கம் செய்யபடும் என FIFA  எச்சரித்து இருந்தது.
இருந்தாலும் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் இந்திய கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கால்பந்து உலகக் கோப்பையை இடமாற்றம் செய்யவும் அல்லது இதுகுறித்த மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் FIFA  தெரிவித்துள்ளது.
image
முறையாக தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் வந்த பின் இடைநீக்கம் ரத்து செய்யபடும் என FIFA தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்திய மகளிர் கால்பந்து தொடரில் வெற்றி பெற்று ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடருக்காக உஸ்பெகிஸ்தான் நேற்று புறப்பட்ட கோகுலம் கேரளா அணியும் தற்போது அந்தத் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.