*பிரித்தானியர் ஒருவரின் படுக்கைக்கு அடியில் 250,000 பவுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
*அவர் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்பவர் என தெரியவந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் முதுகுப்பையில் 20,000 பவுண்டுகளுடன் சிக்கிய பிரித்தானியர் ஒருவரது வீட்டை பொலிசார் சோதனையிட்டனர்.
லண்டனில் முதுகுப்பையுடன் நடந்துசென்றுகொண்டிருந்த Lin Guo (32) என்பவரை பொலிசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அவரது முதுகுப்பையில் 20,000 பவுண்டுகள் இருந்ததுடன், அவரது பாக்கெட்டில் 1,200 பவுண்டுகள் வைத்திருந்தார் அவர்.
Credit: SWNS
அதைத் தொடர்ந்து கிழக்கு லண்டனிலிருக்கும் அவரது வீட்டை பொலிசார் சோதனையிட்டனர். அப்போது அவரது படுக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர். அதில், 250,000 பவுண்டுகள் இருந்தன.
மேலும், படுக்கைக்கருகில் இருந்த மேசை ஒன்றிற்குள் 6,300 பவுண்டுகளும், பணம் எண்ணும் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில், Lin Guo சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்பவர் என்பது தெரியவந்தது. அவரது வீட்டிலிருந்த பணத்தைப் பறிமுதல் செய்த பொலிசார் அவரைக் கைது செய்தனர்.
Lin Guoக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.