தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்?

கடந்த வாரம் தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு மேலாக முடிவடைந்திருந்தது. இது முடிவிலும் 1800 டாலர்களுக்கு மேலாக முடிவடைந்த நிலையில், இது இந்த வாரம் என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

எனினும் கடந்த அமர்வில் 1800 டாலர்களுக்கு மேலாக தொடங்கியிருந்தாலும், முடிவில் 1800 டாலர்களுக்கு கீழாகவே முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்திலும் தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழாகவே தொடங்கியுள்ளது.

டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்று குறைந்து, பின்னர் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய தங்கம் விலையானது, தொடர்ந்து தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. இது இன்னும் சரியுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? தற்போதைய விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

1947ல் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா.. 76வது சுதந்திர நாளில் இன்று எவ்வளவு?

சரிவில் தங்கம்

சரிவில் தங்கம்

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமெரிக்க டாலரின் மதிப்பானது, சற்று மீண்டும் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இது தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையானது சற்று அழுத்தத்திலேயே காணப்படுகின்றது. இது இன்னும் சற்று சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

சர்வதேச சந்தையில் ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், இது அடுத்த கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதத்தினால் பொருளாதார வளர்ச்சி சரிவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

முக்கிய நிகழ்வுகள்
 

முக்கிய நிகழ்வுகள்

வரும் நாட்களில் அமெரிக்காவின் வீடு விற்பனை குறித்தான தரவு, சீனாவின் பீப்பிள்ஸ் வங்கி வட்டி குறித்தான முக்கிய நடவடிக்கை, சில்லறை விற்பனை குறித்தான சீனாவின் தரவு, இது தவிர உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை, சீனா தாய்வான் பிரச்சனை, அமெரிக்கா – சீனா இடையேயான பதற்றம் என பல முக்கிய காரணிகளும் நீண்டகால நோக்கில் கவனிக்க வேண்டிய காரணிகளில் ஒன்றாக உள்ளது.

வட்டி அதிகரிக்குமா?

வட்டி அதிகரிக்குமா?

அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது சற்றே மிதமாக தொடங்கியுள்ள நிலையில், இது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிப்பு இருக்குமா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பல தரப்பு நிபுணர்களும் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், அது பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்கலாம். இதனால் இனியும் வட்டி அதிகரிப்பு இருக்காது என்றும் கூறுகின்றனர். ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1796.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

தங்கம் விலையானது தற்போது இந்திய சந்தையில் கேப் டவுன் ஆகி 10 கிராமுக்கு 513 ரூபாய் குறைந்து, 52,072 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் கிலோவுக்கு 1211 ரூபாய் குறைந்து, 58,065 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையும் குறைந்து காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து தான் காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 4876 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து, 39,008 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 5278 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,224 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து, 52,780 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 63.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 638 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 63,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று – ரூ.48,760

மும்பை – ரூ.48,000

டெல்லி – ரூ.48,150

பெங்களூர் – ரூ.48,050

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,760

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 16th August 2022: Gold prices are trading near 1796 dollars

gold price on 16th August 2022: Gold prices are trading near 1796 dollars/தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. சாமானிய மக்களுக்கு சரியான வாய்ப்பு தான்?

Story first published: Tuesday, August 16, 2022, 10:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.