வடகொரிய விடுதலை தினத்தை ஒட்டி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்ய அதிபர் புடின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான கொரிய தீபகற்பம் மற்றும் வடகிழக்கு ஆசியப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரு தரப்பினரின் நலனுக்கும் உதவும் எனக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரிவுபடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் புடின் கூறியுள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கிம் ஜாங் உன்னும் புடினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இரண்டாம் உலகப் போரில் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்திருந்த ஜப்பானை வென்றதன் மூலம் ரஷ்யா-வட கொரியா இடையே நட்பு உருவானது எனவும், எதிரிகளின் ராணுவத்தை சமாளிக்க, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, ஆதரவு, ராணுவ ஒருங்கிணைப்பு போன்றவை முன்னெப்போதுமில்லாத அளவில் வலுவடைந்துள்ளதாகவும் கிம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கிம் தனது கடிதத்தில் எதிரி எனப் பொதுவாகக் கூறியிருந்தாலும் அவர் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையுமே கூறியிருப்பதாகக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க | சீனாவை சீண்டும் அமெரிக்கா; நான்சி பெலோசியை தொடர்ந்து ‘இவர்களும்’ தைவான் பயணம்!
2019-ம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யாவுக்கும் – வடகொரியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வளரும் என்றும் கிம் கூறியுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சர்வதேச வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போரில், வடகொரியா ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது. இந்த போரைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மனத்திற்கு எதிராக வடகொரியா வாக்களித்தது. அதேபோல, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இருந்து பிரிந்த டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை தனி நாடுகளாக வடகொரியா அங்கீகரித்தது.
உக்ரைன் மீதான போரினால் ரஷ்யா மீது பல்வேறு உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தாலும் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை விலக்கிக்கொள்ளவில்லை. அவ்வப்போது ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என அச்சுறுத்தி வரும் வடகொரியா, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்குமோ என்ற கேள்வி, புடினின் இந்தக் கடிதம் மூலம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | தீவிரமாக சேதமடைந்த உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையம்: ஒரு உலை மூடப்பட்டது
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ