சென்னை: வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எப்.எஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8,000 வட்டி தருவோம் என பொதுமக்களுக்கு ஆசைகாட்டி மோசம் செய்த நிதி நிறுவனமாக வேலூரை தலைமையிடமாக கொண்டுள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. முக்கியமாக, சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், எனவட ஆற்காடு மாவட்டங்களில் பல கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், கடந்த மாதம், ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்துக்கு தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி ஆய்வு நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பொதுமக்களிடம் பணம் வசூலிக்க மூளைச் சலவை செய்வதற்காக பணியமர்த்தப்பட்டிருந்த முக்கிய ஏஜெண்ட்களான சுகுமார், மின்மினி சரவணன் ஆகியோரது சென்னை வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தியிருக்கிறது. கட்டுக்கட்டாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்lன.
இந்த மோசடியில், எற்கனவே பல முகவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, மேலும் 2 பேரை கைது செய்தனர். மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஐ.எப்.எஸ் நிறுவன நிர்வாகிகளை போலீஸ் தேடி வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பான விசாரணை இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.