கல்லீரல் புற்றுநோய் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, “ஒவ்வொரு ஆண்டும் 700,000 க்கும் அதிகமான இறப்புகளுக்கு இது காரணமாகிறது.”
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (யுஎஸ்சி) ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில், ”ஃபாரெவர் கெமிக்கல்ஸ்’ வைரஸ் அல்லாத ஹெபடோசெல்லுலர் கார்சினோமா – (ஒரு பொதுவான கல்லீரல் புற்றுநோய்) அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று கண்டறிந்துள்ளது.
எப்போதும் இரசாயனங்கள் என்றால் என்ன?
பொதுவாக ‘ஃபாரெவர் கெமிக்கல்ஸ் (forever chemicals) அல்லது பெர்-அண்ட் பாலி-ஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (per-and poly-fluoroalkyl substances) என்று அழைக்கப்படும் இவை மனிதனால் உருவாக்கப்பட்ட இரசாயனங்கள், அவை சிதைவடையாது.
இதுகுறித்து புதுதில்லி, ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை மருத்துவர் பங்கஜ் பூரி இந்தியன் எக்ஸ்பிரஸ்.காமிடம் கூறுகையில்; எந்தவொரு எண்ணெய்யும், நீர் மற்றும் தீயை எதிர்க்கும் போது இந்த இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை உடைந்து போகாததால், விரும்பப்படுகின்றன.
இந்த இரசாயனங்கள் பொதுவாக நான்-ஸ்டிக் பான்கள், அழகுசாதனப் பொருட்கள், ஷாம்புகள் மற்றும் உணவுப் பொதிகளில் காணப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.
‘ஃபாரெவர் கெமிக்கல்ஸ் விளைவுகள்
அதிக பெர்ஃப்ளூரோக்டேன் சல்போனேட் (PFOS) வெளிப்பாடு, வைரஸ் அல்லாத ஹெபடோசெல்லுலர் கார்சினோமா புற்றுநோய் (HCC) அபாயத்துடன் தொடர்புடையது, மேலும் குளுக்கோஸ், அமினோ அமிலம் மற்றும் பித்த அமிலம் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் சாத்தியமான அறிகுறிகள் இருந்தன என்று ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
இந்த இரசாயனங்கள் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை நான்கரை மடங்கு அதிகரிக்கின்றன.
அவை நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதை மறுப்பதற்கில்லை. பெரும்பாலான புற்றுநோய்கள் சிரோசிஸ், ஹெபடைடிஸ் பி அல்லது கொழுப்பு கல்லீரல் வகைகளின் கீழ் வருகின்றன என்று அவர் விளக்கினார். மேற்கூறிய காரணங்களால் ஏற்படாத அனைத்து கல்லீரல் புற்றுநோய்களும் இந்த இரசாயனங்கள் காரணமாக இருக்கலாம்.
இவை மெதுவாக செயல்படும், இந்த இரசாயனங்கள் ஹார்மோன்களை மாற்றும், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும், கல்லீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோயை ஏற்படுத்தும்.
உங்கள் குடிநீரிலும் இந்த இரசாயனங்கள் இருக்கலாம், ஏனென்றால் மற்ற சேர்மங்களைப் போலவே அவைகளும் அதில் ஊடுருவக்கூடும்.
தீர்வு
இந்த இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்று மருத்துவர் பூரி பரிந்துரைத்தார்.
ஃபாரெவர் கெமிக்கல்ஸ் ஃப்ரி’ லேபிளுடன் இருக்கும் ஜவுளி மற்றும் நான் ஸ்டிக் பான்களை பார்த்து வாங்குங்கள். ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பெரும்பாலானவை ஒட்டாத பிளாஸ்டிக்கில் (non-stick plastic) வருகின்றன, எனவே ஆர்டர் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“