சென்னை
:
கடந்த
சில
மாதங்களாகவே
விஜய்
மீது
வழக்குகள்
அடுத்தடுத்து
விசாரைணக்கு
வந்து
கொண்டிருக்கின்றன.
அதுவும்
வரி
விதிப்பு
தொடர்பான
வழக்குகளில்
விஜய்யின்
பெயர்
தொடர்ந்து
அடிபட்டு
வருகிறது.
கோலிவுட்டின்
டாப்
நடிகர்களில்
ஒருவராக
இருக்கும்
விஜய்,
2015
ம்
ஆண்டு
சிம்புதேவன்
இயக்கிய
புலி
படத்தில்
நடித்திருந்தார்.
130
கோடி
வரை
செலவு
செய்து
எடுக்கப்பட்ட
இந்த
படம்
101
கோடிகளை
வசூலாக
பெற்றது.
தெலுங்கு
மற்றும்
இந்தியிலும்
கூட
இந்த
படம்
டப்
செய்து
வெளியிடப்பட்டது.
இந்த
படத்தில்
சேட்டிலைட்
உரிமம்
100
கோடிக்கு
விற்பனை
செய்யப்பட்டது.இந்த
படத்திற்கு
விஜய்
20
கோடி
வரை
சம்பளமாக
பெற்றதாக
சொல்லப்படுகிறது.
விஜய்
தாக்கல்
செய்த
வருமான
மதிப்பு
கடந்த
2016-17ஆம்
நிதியாண்டிற்கான
வருமான
வரி
கணக்கை
நடிகர்
விஜய்
தாக்கல்
செய்த
போது,
அந்த
ஆண்டிற்கான
வருமானமாக
35
கோடியே
42
லட்சத்து
91
ஆயிரத்து
890
ரூபாய்
பெற்றதாக
குறிப்பிட்டிருந்தார்.
வருமானத்தை
மறைத்தாரா
விஜய்?
அந்த
ஆண்டுக்கான
மதிப்பீட்டு
நடவடிக்கையை
மேற்கொண்ட
வருமான
வரித்
துறை,
நடிகர்
விஜய்
வீட்டில்
கடந்த
2015ம்
ஆண்டு
நடத்திய
சோதனையில்
கைப்பற்றப்பட்ட
ஆவணங்களுடன்
ஒப்பிட்டு
பார்த்தது.
அதன்படி,
புலி
படத்திற்கு
பெற்ற
15
கோடி
ரூபாய்
வருமானத்தை
கணக்கில்
காட்டவில்லை
என
கண்டறிந்தது.
விஜய்க்கு
ரூ.1.5
கோடி
அபராதம்
வருமானத்தை
மறைத்ததற்கான
ஒன்றரை
கோடி
ரூபாய்
அபராதம்
விதித்து
கடந்த
ஜூன்
30ஆம்
தேதி
வருமான
வரித்துறை
உத்தரவு
பிறப்பித்தது.
தனக்கு
அபராதம்
விதிக்கப்பட்ட
உத்தரவை
எதிர்த்து
நடிகர்
விஜய்
தரப்பில்
சென்னை
உயர்
நீதிமன்றத்தில்
வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
தாமதமாக
பிறப்பிக்கப்பட்ட
உத்தரவு
அபராதம்
விதிப்பதாக
இருந்திருந்தால்,
2019ஆம்
ஆண்டிலேயே
உத்தரவு
பிறப்பித்திருக்க
வேண்டும்
என்றும்,
காலதாமதமாக
பிறப்பிக்கப்பட்ட
உத்தரவை
ரத்து
செய்ய
வேண்டும்
என
மனுவில்
குறிப்பிட்டிருந்தார்.
விஜய்க்கு
எதிரான
வழக்கில்
கோர்ட்
உத்தரவு
இந்த
மனுவை
விசாரித்த
நீதிபதி
அனிதா
சுமந்த்,
வருமான
வரித்துறை
உத்தரவுக்கு
இடைக்கால
தடை
விதித்து
உத்தரவிட்டார்.மேலும்,
மனுவுக்கு
வருமான
வரித்துறை
பதிலளிக்க
உத்தரவிட்ட
நீதிபதி,விசாரணையை
செப்டம்பர்
16க்கு
தள்ளி
வைத்துள்ளார்.
அடுத்தடுத்த
விசாரைணக்கு
வரும்
வழக்கு
2012
ம்
ஆண்டு
இங்கிலாந்தில்
இருந்து
இறக்குமதி
செய்யப்பட்ட
ரோல்ஸ்
ராய்ஸ்
கோஸ்ட்
சொகுசு
கார்
இறக்குமதிக்கு
நுழைவு
வரியை
நீண்ட
காலமாக
நிலுவையில்
வைத்ததாக
விஜய்க்கு
ரூ.1
லட்சம்
அபராதம்
விதித்தது
வணிக
வரித்துறை.
இதை
எதிர்த்து
விஜய்
தொடர்ந்த
வழக்கு
சமீபத்தில்
தான்
தீர்ப்பு
வழங்கப்பட்டது.