மத்திய மாநில அரசுகளுக்கு ஆர்பிஐ முன்னாள் ஆளுனர் செம அட்வைஸ்.. !

இந்தியா பொருளாதார வளர்ச்சி விகிதமானது 5 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி காண வேண்டுமெனில் 2028 – 2029ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு வளர்ச்சி விகிதம் 9% என்ற அளவுக்கு இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் டி சுப்பராவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019ம் ஆண்டு 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர். 2025ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்ட வேண்டும் என்ற இலக்கினை அறிவித்தது.

ஆனால் கொரோனா பெருந்திதொற்றுக்கு பிறகு, அரசின் இலக்கு எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது எனலாம். முதல் அலை இரண்டாம் அலை போய், அடுத்தடுத்து வேறுவேறு தோற்றத்தில் கொரோனா உருமாற்றம் அடைந்து வருகின்றது.

கனவாக மாறிய இலக்கு

குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது போடப்பட்ட கடுமையாக லாக்டவுன் மத்தியில் [பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பெரிதும் முடங்கின. இதனால் சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மத்திய அரசின் இலக்கானது வெறும் கனவாகவே மாறிவிட்டது.

வருடத்துக்கு 9% வளர்ச்சி இலக்கு

வருடத்துக்கு 9% வளர்ச்சி இலக்கு

இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 9% வளர்ச்சி கண்டால் மட்டுமே 2028 – 29ல் வளர்ச்சி விகிதமானது 5 டிரில்லியன் டாலரை எட்டும் என்ன டி சுப்பராவ் கூறியுள்ளார்.

மேலும் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய இந்தியாவுக்கு 8 சவால்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.

 8 சவால்கள் என்ன அது?
 

8 சவால்கள் என்ன அது?

8 சவால்களை இந்தியா உடைதெறிய வேண்டும். அப்படி உடைத்தால் மட்டுமே, 5 டிரில்லியன் இலக்கினை எட்ட முடியும் என கூறியுள்ளார்.

அதில் சவால்களாக அவர் கூறியிருப்பது :

முதலீட்டினை அதிகரித்தல்
உற்பத்தி திறனை அதிகரித்தல்
கல்வி மற்றும் ஹெல்த்கேர் துறையை மேம்படுத்துதல்
வேலைவாய்ப்பினை உருவாக்குதல்
விவசாய உற்பத்தியினை அதிகரித்தல்
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்தல்
உலகளாவிய போக்குகளை கண்கானித்து அதற்கேற்ப செயல்படுத்தல்
நிர்வாகத்தினை மேம்படுத்தல்

 மத்திய  மாநில அரசுகளுக்கு சூப்பர் அட்வைஸ்

மத்திய மாநில அரசுகளுக்கு சூப்பர் அட்வைஸ்

மாநில மானியங்கள் குறித்து பிரதமர் மோடி கூறியதை சுட்டிக் காட்டிய சுப்பாராவ், அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சூழ்நிலையில் தவறு செய்கின்றனர். நாட்டில் உபரி பட்ஜெட் இல்லை. சில பாதுகாப்பு தேவை என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்கி அதன் மூலம் இலவசங்களை வழங்க கூடாது. இதன் மூலம் வருங்கால சந்ததிகளுக்கு சுமையை அதிகரிக்க கூடாது. அதில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Don’t give freebies by taking loans. This will increase the burden on the future generations – former RBI gov

Don’t give freebies by taking loans. This will increase the burden on the future generations – former RBI gov/மத்திய மாநில அரசுகளுக்கு ஆர்பிஐ முன்னாள் ஆளுனர் செம அட்வைஸ்.. !

Story first published: Tuesday, August 16, 2022, 14:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.