திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை சிசிடிவிக் காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.
அதில், 15ஆம் தேதி நள்ளிரவில் ஏடிஎம்மிற்கு வந்த மர்மநபர், கல்லால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று, முடியாததால் திரும்பி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது மன்னார்குடியை சேர்ந்த கூலி தொழிலாளியான நாகேந்திரன் என்பதும், மதுபோதையில் பேருந்து நிலையம் அருகே மயங்கி கிடந்த அவரிடம் இருந்த, 170 ரூபாயை சிலர் பிக்பாக்கெட் அடித்து சென்றுவிட்டதால், மது வாங்க குடிபோதையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயன்றது தெரியவந்தது.