உள்நாட்டு மதுபான போத்தல்கள் சிறந்த தரத்தில் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான விசேட கணனி செயலி ஒன்றை (App) அடுத்த இரண்டு வாரங்களில் பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இலங்கை மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கணனி செயலி (App) இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படவிருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த செயற்பாடு தாமதமாdjhf என்று திணைக்களத்தின் ஆணையாளர் ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அதனை உற்பத்தி செய்த உற்பத்தியாளர் முதல், அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளர்களுக்கு அறிந்து கொள்ள முடியும்.
இதனூடாக போலியான மதுபானங்கள் சந்தைக்கு வருவதை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு ஏற்கனவே இந்த கணனி செயலி (App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில் உள்நாட்டு மதுபானங்களுக்கான ஸ்டிக்கர்களை வெளியிடும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக இறை வரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது