அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடையால் பல ஆண்டுகளாகச் செல்வத்தில் திளைக்க வேண்டிய ஈரான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது என்றால் மிகையில்லை.
இந்த நிலைக்குக் காரணமான வல்லரசு நாடுகளின் வர்த்தகத் தடையை நீக்கப்பட முக்கியமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது ஈரான் நாட்டுக்கு மிகவும் முக்கியமான நிகழ்வு என்பது மட்டும் அல்லாமல் அமெரிக்கா உலக நாடுகளின் மீதான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தும்.
ஈரான்
2006ல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா அணு ஆயுத திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கடுமையான தடையை எண்ணெய், எரிவாயு, பெட்ரோகெமிக்கல் மீது விதித்தது. இதன் அந்நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாக முடக்கியது.
வியன்னா கூட்டம்
இந்த நிலையில் தான் 2015 ஆம் ஆண்டு ஈரான் நாட்டு உயர் மட்ட அதிகாரிகளும், ஈரான் மீது தடை விதித்த நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் அந்நாட்டின் மீதான தடைகளை நீக்க வேண்டுமென்றால் அணு ஆயுத திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுப் புதிய திருத்தப்பட்ட ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
“இறுதி” வரைவு ஒப்பந்தம்
வியன்னாவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றிய மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தைப் பல முறை ஆலோசனை செய்யப்பட்டுப் புதுப்பிக்கும் “இறுதி” வரைவு ஒப்பந்தத்திற்குத் தனது பதிலை வழங்கியுள்ளதாக ஈரான் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
அமெரிக்கா
“வியன்னா ஒப்பந்தத்தின் வரைவு உரைக்கு ஈரான் எழுத்துப்பூர்வமா பதிலைச் சமர்ப்பித்துள்ளது, மேலும் அமெரிக்கா யதார்த்தமாகவும் மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட்டால் ஒப்பந்தம் முடிவடையும் என்று அறிவித்துள்ளது” என ஈரான் அதிகாரப்பூர்வ IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்
இந்த ஒப்பந்தம் ஒப்புதல் பெற்றால் நாளொன்றுக்கு 2.5 மில்லியன் பேரல் அளவிலான ஈரான் நாட்டின் எண்ணெய் உற்பத்தியின் மீதான அமெரிக்கத் தடைகளை நீக்குவதற்கு வழிவகுக்கும். இது மட்டும் அல்லாமல் தற்போது உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் குறைக்க முடியும்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் கீழ் அமெரிக்க அரசு 2018 இல் பேச்சுவார்த்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டதிலிருந்து இந்த ஒப்பந்தம் செயலிழந்துள்ளது. இதனால் நீக்கப்பட்ட தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 8 அன்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் சமர்ப்பித்த இறுதி வரைவுக்குத் தெஹ்ரானின் பதிலுக்காகப் பல பெரிய வல்லரசு நாடுகள் காத்திருக்கின்றன.
ரஷ்யா ஆதிக்கம்
ரஷ்யா தனது எண்ணெய் வளத்தைக் கொண்டு உலக நாடுகளை மிரட்டி வரும் நிலையில் ஈரான் மீதான தடை நீக்கம் கச்சா எண்ணெய், எரிவாயு சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும். இதனால் ரஷ்யாவின் ஆதிக்கம் குறையும்.
Iran replied to ‘final’ EU nuclear text of 2015 Vienna agreement
Iran replied to ‘final’ EU nuclear text of 2015 Vienna agreement ஈரான்-க்கு விடிவுகாலம்.. இறுதி ஒப்பந்தத்திற்குப் பதில் கொடுத்தாச்சு.. அமெரிக்கா முடிவு என்ன..?!