வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவில், வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மலை மற்றும் ஆறுகள் நிறைந்த பகுதியான சோங்குயிங் மாகாணத்தில் மழை குறைந்தளவே பெய்துள்ளது. வழக்கமான பெய்யும் மழையின் அளவில் பாதி அளவே இந்த ஆண்டு பெய்துள்ளது. இதனால், அங்குள்ள சிறிய நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில், குடிநீருக்காகவும், விவசாய பணிகளுக்காகவும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 36,700 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதன் அருகில் உள்ள ஹியுபே மாகாணமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, சில இடங்களில் பயிர்சாகுபடி முற்றிலும் நாசமடைந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
அதேநேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக சீனாவில், சில இடங்கள் காட்டாற்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement