அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
அரசாஙங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான் கலாநிதி பந்துல குணவர்தன இது குறித்து விளக்கமளித்தார்.
அமைச்சரவை உப குழு தொடர்பாக நேற்று(15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
02. 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள்
ஜனாதிபதி
பாதுகாப்பு மற்று நிதி உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர்
• கௌரவ தினேஷ் குணவர்த்தன
பிரதமர்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
• கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சர்
• கௌரவ சுசில் பிரேமஜயந்த
கல்வி அமைச்சர்
• கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வெகுசன ஊடக அமைச்சர்
• கௌரவ அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர்
• கௌரவ விதுர விக்கிரமநாயக்க
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர்
• கௌரவ கஞ்சன விஜேசேகர
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
• கௌரவ டிரான் அலஸ்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்