அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக
, வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், மூன்று தரப்பினரும் வைத்த பரபரப்பான வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நிலையில், தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இதுவரை எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருந்த நிலையில், இப்போது ஓபிஎஸ் கை கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கி வருகிறது. இதனால், உற்சாகத்தில் இருக்கும் ஓபிஎஸ் தரப்பு புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. விரைவில் பொதுக்குழுவை கூட்டி, அதற்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கும் வேலைகளிலும் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். நாளை வரவிருக்கும் தீர்ப்பும் சாதகமாக அமையும் பட்சத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு அது கூடுதல் உற்சாகத்தை கொடுக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே, சசிகலா, அவரது சகோதரர் திவாகரன் ஆகியோர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்துள்ளதாக தகவல் வெளியாகின. கொரோனா சிகிச்சையின் போது, நலம் விசாரித்ததில் இருந்து அவர்களுக்குள்ளான நெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், கிட்டத்தட்ட சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்கிறார்கள். இதற்கு டெல்லியின் ஆசிர்வாதமும் இருக்கிறதாக கூறுகிறார்கள். அதன் ஒருபகுதியாக, சசிகலாவுக்கு என்ன பதவி கொடுப்பது என்பது பற்றியும் ஆலோசனை சென்று கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், சசிகலாவின் இணைப்பு என்பது கடைசியில்தான் இருக்கும் என்கிறார்கள்.
அண்மையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய முக்குலத்தோர் அமைப்பை சேர்ந்தவர்கள், கட்சியில் உரிய மரியாதையை பெற வேண்டும் என்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் விரைவில் நீங்கள் கைகோர்க்க வேண்டும். தேவர் ஜெயந்தியன்று நீங்கள் மூவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என தங்களது ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி, ‘ஒரே நேரத்தில் மதுரையிலும், டெல்லியிலும்: எடப்பாடி புதிய கேம்!’ என்ற தலைப்பில் சமயம் தமிழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த பின்னணியில், எப்படியும் அதிமுகவை கைபற்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஓபிஎஸ்ஸிடம், கட்சியை கைப்பற்ற வேண்டும் எனில், சின்னம்மாவுடன் விரைவாக நீங்கள் சேர வேண்டும். இருவரும் ஒன்றிணைந்து முயற்சித்தால் அதற்கு கூடுதல் பலம், சமூகமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகளும், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்களும் அவரிடம் மீண்டும் வலியுறுத்தி பேசியுள்ளனர் அப்போது, மவுனமாக தலையசைத்துக் கொண்ட ஓபிஎஸ், இப்போதைக்கு சின்னம்மாவுடன் வெளிப்படையாக இணைந்து செயல்பட முடியாது. அவரை கட்சியை விட்டு நீக்கிய தீர்மானத்தில் நானும் கையெழுத்திட்டுள்ளேன். எனவே, வெளிப்படையாக இணைந்தால் சிக்கல் வரும். அதனால், ரகசியகாகவே திரைமறைவில் காய் நகர்த்த வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளாராம்.
ஓபிஎஸ்ஸும், சசிகலாவும் இணைந்தால் அது தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை எடப்பாடி பழனிசாமியும் நன்கு அறிந்தே உள்ளார். அவர்கள் இருவருக்கும் உள்ள பலம் என்பது முக்குலத்தோர் சமுதாயம். எனவே, அதனை உடைக்கும் வியூகங்களையும் அவர் வகுத்துக் கொண்டிருப்பதாக, மேலே சொன்ன மதுரை அசைன்மெண்ட் செய்தியில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். அதன் அடுத்தகட்டமாக, தன்னால் பதவி பறிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை சமாதானப்படுத்தி, அவர்களுக்கு மீண்டும் பதவிகளை கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம். மேலும், தேவர் ஜெயந்தி விழாவிலும் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போது, சசிகலா, ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் கிடைக்கும் வரவேற்பை விட தனக்கு கூடுதலாக கிடைக்க வேண்டும்; அதன் மூலம் முக்குலத்தோர் சமூக மக்களிடையே தனக்கான இமேஜை உயர்த்த முடியும் என்பதால், அதற்கான வேலைகளையும் இபிஎஸ் முடுக்கி விட்டிருப்பதாக கூறுகிறார்கள்.