பொது இடங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா..? – மத்திய அரசு சொல்வது என்ன..?

இந்தியாவில் 17% க்கு உட்பட்டோர் மட்டுமே கொரோன டோஸ் செலுத்தியுள்ளதாக மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.

இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா கலந்துகொண்டு பேசினார். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பேசிய அவர் “ நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா டோஸ் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்”

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா இந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.

இந்தியாவில் தற்போதைய கொரோனா பரவல் நிலவரம் குறித்தும் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாகவும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா இணையவழியில் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளார். மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா “ கொரோனா பெருந்தொற்று நமக்கு, சுகாதார உள்கட்டமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை கற்றுத் தந்துள்ளது. நாடு முழுவதும் பல அடுக்கு சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருவகிறது.

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதற்காக மத்திய அரசு வழங்கும் நிதியை, சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியுள்ளன. மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும்” என்று மாநில சுகாதார அமைச்சர்களை வலியுறுத்தினார்.

மேலும் கொரோனா தடுப்பு டோஸ்கள் வீணாகாத வகையில் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முதலில் காலாவதி ஆகும் டோஸ்களை அதன் காலாவதி தேதிக்கு முன்னரே அதைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.