வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இமயமலையில் உற்பத்தியாகி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடும் ஜீவநதியான கங்கை நதி சுமார் 2 ஆயிரத்து 525 கி.மீ. நீளம் கொண்டது. இந்நதியானது, அண்டை நாடான வங்கதேசம் வழியாக பாய்ந்து இறுதியில் வங்க கடலில் கலக்கிறது. இதற்கிடையில், கங்கை நதி மிகவும் மாசடைந்து வருவதால் அதை தூய்மை படுத்துவதற்கான துறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியது, இந்தியாவின் நீர் வளங்கள் மற்றும் சுற்றுச் சூழல் சவால்களை கருத்தில் கொண்டு, இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அவசியம். கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement