ஐயையோ அவர நாங்க ஒன்னும் பண்ணல… சல்மான் ருஷ்டி விஷயத்தில் அலறும் ஈரான்!

இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), 1988ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic verses) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அது இஸ்லாமிய மதக்கடவுளின் இறைத்தூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தக்கத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அத்துடன் அந்த புத்தகத்திற்கு அந்நாடுகள் தடையும் விதித்தன. இத்துடன் நில்லாமல், 1989ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவித்திருந்தது.

அன்று முதல் சல்மான் ருஷ்டி மீது பலமுறை கொலை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இருந்து எல்லாம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி வந்த ருஷ்டி மீது தற்போது மீண்டும் கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

‘சல்மான் ருஷ்டி’…தலைக்கு 3 மில்லியன் டாலர் அறிவித்த ஈரான்: அப்படி என்னதான் தப்பு செய்தார்?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 13 ஆம் தேதி இரவு நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார் சல்மான் ருஷ்டி. அப்போதுதான் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கருப்பு நிற ஆடையுடன், முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்தபடி மேடையில் அமர்ந்திருந்த ருஷ்டியை நோக்கி ஓடினான். கண் இமைக்கும் நேரத்தில் சல்மான் ருஷ்டியை அந்த நபர் கத்தியால் கண்மூடித்தனமாக குத்தினான்.

உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ருஷ்டிக்கு வழங்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் சுவாசம் அகற்றப்பட்டுள்ளதே தவிர, அவர் இன்னும் ஐசியு சிகிச்சைப் பிரிவில்தான் உள்ளார். கத்தி குத்தில் அவரது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கண் நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘யு ஆர் நெக்ஸ்ட்!’ – ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்!

இந்த நிலையில் சல்மான் ருஷ்டி மீதான கொலைவெறி தாக்குதல் குறித்து ஈரான் அரசு தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. ‘எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நியூயார்க்கிவ் நிகழ்த்தபட்ட தாக்குதலுக்கும், ஈரான் அரசுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை’ என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் இரு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள சல்மான் ருஷ்டி எழுதிய ‘நள்ளிரவின் சிறுவர்கள்’ நாவல், 1981 இல் இங்கிலாந்தின் உயரிய விருதான புக்கர் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.