சொந்த தொழில் செய்வது அல்லது ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது என ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு விதமான ஆப்ஷன்கள் கிடைக்கும்.
சிலருக்கு ரிஸ்க் இல்லாமல் வாழ வேண்டுமென்றால் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு வரும் சம்பளத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி கொள்வார்கள்.
ஆனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு பலரிடத்தில் இருக்கும். சொந்த தொழில் செய்தால் தொழிலதிபராகி ஒரு சில ஆண்டுகளில் லட்சாதிபதியாகலாம் என்றும் பலர் நினைப்பதுண்டு. இந்த நிலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
சொந்த தொழில்
வேலை செய்வதை விட தொழில் செய்வது என்பது கவர்ச்சிகரமானது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பொருத்தமான தொழில் மற்றும் திட்டமிடல் மிகவும் அவசியம். உங்கள் தொழில் பயணத்தை ஆரம்பிக்கும் முன் சரியான கட்டமைப்பு மற்றும் நிதி அமைப்புகளை நீங்கள் உருவாக்கி கொண்டீர்களா? என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் தான் நீங்கள் வேலையை விட்டு வெளியே வந்து சொந்த தொழிலை ஆரம்பிக்க வேண்டும்.
சேவை வணிகம்
பொதுவாக தயாரிப்பு வணிகத்தைவிட சேவை வணிகம் தொடங்குவது எளிதானது மற்றும் லாபகரமானது ஆகும். நீங்கள் உங்கள் சேவைகளை அதாவது உங்கள் நேரத்தை விற்பனை செய்து பெரும் வருவாய் பெறலாம். தயாரிப்பு வணிகங்கள் மிகவும் மதிப்புடையது மட்டுமன்றி மூலதனமும் அதிகம் ஆகும். எனவே சேவை தொழிலை செய்வது உங்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும் என்பதை முதல் கட்டமாக தெரிந்து கொள்ளுங்கள்.
பொறுமை முக்கியம்
மேலும் ஒரு தொழிலைத் தொடங்கினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சோதனையான காலமாக இருக்கும். அந்த நேரத்தில் மிகவும் பொறுமையாக நிதானமாக முடிவெடுத்து தொழிலை மென்மேலும் வளர்ப்பது எப்படி என்பதை யோசிக்க வேண்டும். மேலும் நீங்கள் வேலையை விட்டு விட்டு வெளியே வருவதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்கு உங்கள் குடும்பத்தை கவனிக்கும் அளவுக்கு உங்களிடம் வங்கியில் இருப்பு இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
சோதனையான காலகட்டம்
புதியதாக ஆரம்பிக்கும் தொழிலில் 12 முதல் 24 மாதங்கள் வரை பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என்பதால் அந்த காலகட்டம் சோதனையானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேலையில் இருக்கும்போதே தொழில்
மேலும் நீங்கள் வேலையை விட்டுவிட்டு வணிகம் செய்வது என்பது முடிவு செய்துவிட்டால் வேலையில் இருக்கும்போதே ஓய்வு நேரத்தில் நீங்கள் வணிகத்தை தொடங்குவது குறித்து கவனத்தை செலுத்த வேண்டும். வேலையை முடித்துவிட்டு மாலை நேரத்தில் மற்றும் வார இறுதி நாட்களில் நீங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழில் குறித்து ஆய்வு செய்து அதற்காக என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நீங்கள் தைரியமாக முழு நேர தொழிலதிபர்களாக ஆபத்தில்லாமல் களத்தில் இறங்கலாம்.
கோதுமை கஞ்சி
அந்த வகையில் நீங்கள் உதாரணத்திற்கு கோதுமை கஞ்சி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில் கோதுமையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரால் கழுவ வேண்டும். அதன் பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரிலிருந்து கோதுமையை எடுத்து தண்ணீர் உலரும் வகை காய வைக்க வேண்டும். பின் மாவு மில்லில் அரைத்து கோதுமை கஞ்சி செய்யலாம்.
மூலதனம் எவ்வளவு?
இந்த தொழில் தொடங்குவதற்கு உங்களுக்கு சொந்த நிலம் இருக்க வேண்டும். ஒருவேளை சொந்த நிலம் இல்லை என்றால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். 500 சதுர அடி நிலம் இந்த தொழில் செய்வதற்குத் தேவைப்படும். வாடகை மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவை சேர்த்து இந்த தொழிலுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் வரை மூலதனம் தேவைப்படும்.
லாபம் எவ்வளவு?
இந்த தொழிலில் 100% திறமையாக உற்பத்தி செய்தால் ஆண்டுக்கு 600 குவிண்டால் உற்பத்தி செய்யலாம். ஒரு குவிண்டால் ரூ.1200 விலையின்படி இதன் மதிப்பு ரூ.7,19,000 ஆகும். விற்பனை விலை ரூ.8,50,000 ஆகும். எனவே இந்த தொழிலில் ஆண்டு லாபம் ரூ 1 லட்சத்து 16 ஆயிரம் கிடைக்கும்.
Leaving Your Job To Start A Business? Check Out These Tips
Leaving Your Job To Start A Business? Check Out These Tips | வேலையை விட்டுவிட்டு பிசினஸ் தொடங்கப்போகிறீர்களா? இதோ சில டிப்ஸ்!