75வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய மக்களின் 5ஜி சேவைக்கான காத்திருப்பு முடிந்துவிட்டதாகப் பேசினார்.
மேலும் “டிஜிட்டல் இந்தியா’ மூலம் டிஜிட்டல் சேவையில் மக்களின் பயன்பாட்டை அடிமட்ட அளவில் கொண்டு வருகிறோம், விரைவில் ஒவ்வொரு கிராமமும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படும் 5ஜி சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம் எனப் பேசினார்.
இதேவேளையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மோடி அரசு அறிவித்த முக்கியமான அறிவிப்பை அடிப்படையாக வைத்து புதிய வர்த்தக வாய்ப்பை உருவாக்க உள்ளது.
76வது சுதந்திர தினம்… இன்று முதல் தொடங்குகிறதா 5ஜி சேவை?
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
சில நாட்களுக்கு முன்பு மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் 12000 ரூபாய்க்குக் கீழ் சீன நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யக் கூடாது எனத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
Lava, Micromax, Karbonn
இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான Lava, Micromax மற்றும் Karbonn பெரிய அளவில் பயன்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இதன் முலம் Lava, Micromax மற்றும் Karbonn ஆகிய நிறுவனங்களை மட்டும் அல்லாமல் low budget ஸ்மார்ட்போன் சந்தையை மொத்தமாகக் கைப்பற்றப்போகிறது ரிலையன்ஸ் ஜியோ அதுவும் 5ஜி வாடிக்கையாளர்களாக. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எப்படித் தெரியுமா..?
5ஜி அலைக்கற்றை
இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவையில் பெரும் புரட்சியை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து அதிகளவிலான தொகையை முதலீடு செய்து 5ஜி அலைக்கற்றை நாடு முழுவதும் உள்ள முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் கைப்பற்றியுள்ளது. இதைப் பணமாக்கும் விதமாக அதிக விலையில் 5ஜி சேவை மட்டும் அளித்தால் போதாது.
ஆகாஷ் அம்பானி – முகேஷ் அம்பானி
இதற்கிடையில் மத்திய அரசு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை வைத்து பணமாக்க முடிவு செய்துள்ளது ஆகாஷ் அம்பானி – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. ஓரே நேரத்தில் 5ஜி வாடிக்கையாளர்களையும் பெற்று ஸ்மார்ட்போன் விற்பனையிலும் இறங்க உள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
ஜியோ 5ஜி போன்
இந்தியாவில் 12000 ரூபாய்க்குக் கீழ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது, அதேநேரத்தில் 12000 ரூபாய்க்குக் கீழ் ஸ்மார்ட்போன் இல்லை. இப்படி இருக்கையில் ரிலையன்ல் ஜியோ தனது சொந்த பிராண்டில் ஜியோ 5ஜி போனை 12000 ரூபாய்க்குக் கீழ் அறிமுகம் செய்ய உள்ளது.
மலிவான 5ஜி போன்
தற்போதைய நிலையில் இந்தியாவில் மலிவான 5ஜி போன் என்றால் அது சாம்சங் நிறுவனத்தின் M13 5G தான், இதன் விலை 13,999 ரூபாய். இப்படியிருக்கையில் ரிலையன்ஸ் ஜியோ 9000 ரூபாய் முதல் 12000 ரூபாய் பிரிவில் தனது புதிய ஜியோ 5ஜி போன்-ஐ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை
ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் இந்த ஜியோ 5ஜி போன்-ஐ வருகிற தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கூகுள்-ன் சிறப்பு ஆண்ட்ராய்டு ஓஎஸ் ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ போன் நெக்ஸ்ட்-ல் உள்ளது.
Reliance jio tapping new opportunity from modi govt’s plan to ban below rs.12000 smartphones
Reliance jio tapping new opportunity from modi govt’s plan to ban below rs.12000 smartphones மோடி அரசு அறிவிப்பை லாபமாக மாற்றும் முகேஷ் அம்பானி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..!