சர்வதேச அளவில் மிகப்பெரிய எண்ணெய் ஜாம்பவானாக இருந்து வரும் சவுதி அரேபியாவின், சவுதி அராம்கோ நிறுவனம் இரண்டாவது காலாண்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளது எனலாம்.
இரண்டாவது காலாண்டில் 48.4 பில்லியன் டாலர் லாபத்தினை கண்டு சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 90% அதிகமாகும்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட நிறுவனங்களில் மிகப்பெரிய வருவாயினை காணும் நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
மத்திய அரசின் ஒற்றை முடிவு.. ரூ.18,480 கோடி இழப்பை கண்ட எண்ணெய் நிறுவனங்கள்.. ஏன்?
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையால் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. ஏனெனில் ரஷ்யா சர்வதேச அளவில் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்து வருகின்றது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு பிறகு சில நாடுகள் ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதியினை தடை செய்துள்ளன. இன்னும் சில நாடுகள் தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன.
இதுவும் ஒரு காரணம்
இதற்கிடையில் தான் கச்சா எண்ணெய் விலையானது நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் தொடங்கி, தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் எண்ணெய் ஜாம்பவானின் எண்ணெய் வணிகமும் களை கட்டியுள்ளது. இதன் வருவாய் விகிதமும் கடந்த ஆண்டினை காட்டிலும் மிகப்பெரிய அளவில் உச்சம் தொட்டுள்ளது.
முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்
எனினும் பணவீக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும் ரெசசன் அச்சம் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற நிலையே பல நாடுகளில் நிலவி வருகின்றது. ஆக தொழிற்துறையில் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என சவுதி அராம்கோவின் தலைவர் அமீன் நாசர் தெரிவித்துள்ளார்.
ரெசசன் அச்சம்
தற்போது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில் தேவையும் அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு வணிகத்தினை ஊக்கப்படுத்தலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஆக ரெசசன் அச்சமும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இது கச்சா எண்ணெய் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற பதற்றமும் இருந்து வருகின்றது.
உக்ரைன் பிரச்சனை
கொரோனாவின் தாக்கம் குறைந்து பொருளாதாரம் மீளத் தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் தேவையை விட சப்ளை அதிகமாக இருந்தது. எனினும் விலை பெரியளவில் குறைந்தபடாக இல்லை. உக்ரைன் போருக்கு முன்பே கச்சா எண்ணெய் விலை உயர ஆம்பித்த்து விட்டது. இதனை உக்ரைன் பிரச்சனை இன்னும் அதிகரிக்க தூண்டியது. இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பெரும் லாபத்தினை கண்டுள்ளனர்.
பலத்த லாபம் கண்ட உற்பத்தியாளர்கள்
சவுதி அராம்கோ மட்டும் அல்ல, ExxonMobil, Chevron மற்றும் BP உள்பட பல எண்ணெய் உற்பத்தியாளர்களும் பெரும் வருவாயினை கண்டுள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், அரசுகள் வரி விகிதத்தினை குறைக்க முற்பட்டாலும் கூட, எரிபொருள் விலையானது குறைந்தபாடாக இல்லை.
கடவுளை விட அதிகம் பணம் சம்பாதித்த நிறுவனம்
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எக்ஸான் இந்த ஆண்டு கடவுளை விட அதிக பணம் சம்பாதித்துள்ளதாக கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஓபெக் குழுவில் மிகப்பெரிய ஒற்றை உற்பத்தியாளராக சவுதி அராம்கோ இருந்து வருகின்றது. கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினை அதிகரிக்க ஒப்புக் கொண்டன. எனினும் இது மிக மெதுவான வேகத்தில் இருக்கலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை இப்போதைக்கு பெரியளவில் குறையுமா? என்பதும் சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் எண்ணெய் நிறுவனங்கள் காட்டில் தற்போது லாப மழையாக பொழிவது மறுக்க முடியா உண்மையே..
Saudi Aramco posts record profit of $48.4 billion
Saudi Aramco posts record profit of $48.4 billion/எண்ணெய் ஜாம்பவானின் வரலாற்று சாதனை.. 2வது காலாண்டு நிலவரம் என்ன தெரியுமா?