5 வயது சிறுமியை சீரழித்த 15 வயது உறவினர் சிறுவன்| Dinamalar

ஹுப்பள்ளி, : விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு சாக்லேட் ஆசை காண்பித்து, 15 வயதுள்ள உறவினர் சிறுவனே பலாத்காரம் செய்த சம்பவம், ஹுப்பள்ளியில் நடந்தது.ஹுப்பள்ளி நகரின் வீராபுராவின் ஓணி கொல்லர பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு, 5 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது, 15வயது சிறுவன், அச்சிறுமியை துாக்கி கொண்டு, அங்கன்வாடி மைய கட்டடத்தின் உள்ளே சென்றார்.அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி அழுதபடி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அச்சிறுவன் தப்பியோடி விட்டார். தகவலறிந்த பெற்றோர் தங்கள் குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.பின், சிறுவன் மீது பெண்டகேரி போலீசியில் புகார் செய்யப்பட்டது. தப்பியோடிய சிறுவனை பிடித்து வந்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.விசாரணையில், அச்சிறுவன் உறவினர் என்பதும், சாக்லேட் வாங்கி தருவதாக சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.