மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகனங்களின் தொழிற்துறையை பூர்த்தி செய்ய EV இயங்குதளமான Inglo-ஐ அறிமுகம் செய்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஐந்து மின்சார வாகனங்களின் மின்சார வாகன போர்ட்ஃபோலியோ UK ஆக்ஸ்போர்ட்ஷையரில் காட்சிப்படுத்தப்பட்டது. ட்வின் பீக் லோகோவுடன் ஐகானிக் XUV பிராண்டுடன், மஹிந்திரா தனது EV போர்ட்ஃபோலியோவுக்காக BE என்ற புதிய எலக்ட்ரிக் பிராண்டையும் வெளிப்படுத்தியது.
டாடா குழுமத்திற்கு கடும் போட்டியாக இந்த BE என்ற புதிய எலக்ட்ரிக் பிராண்ட் இருக்கும் என கூறப்படுவதால் டாடாவுக்கு இனி போராட்டம் என கூறப்படுகிறது.
சீன ஆதிக்கத்தை ஒடுக்கும் இந்தியா.. களத்தில் இறங்கும் மோடி அரசு..!
மஹிந்திரா & மஹிந்திரா
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்களை அறிமுகம் செய்துள்ளது. XUV மற்றும் BE ஆகிய இரண்டு பிராண்ட்களில் இந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
BE கான்செப்ட்
2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுக்குள் 5 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா & மஹிந்திரா திட்டமிட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார்களுக்காக அறிமுகமாகி இருக்கும் BE.07 கான்செப்ட் முற்றிலும் புதிய டெக்னாலஜியை கொண்டது.
INGLO பிளாட்பார்ம்
மற்ற எலெக்ட்ரிக் SUV-க்கள் போன்று INGLO என்ற புதிய பிளாட்பார்மில் எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த பிளாட்பார்ம் உதவியால் பல்வேறு விதத்தில் வாகனங்களில் பாடிகளை உருவாக்க மஹிந்திரா & மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. மேலும் இது 60 கிலோவாட் ஹவர் முதல் 80 கிலோவாட் ஹவர் வரையிலான பேட்டரிகளை சப்போர்ட் செய்யும் என்பதும் சிறப்புக்குரிய ஒரு தகவல் ஆகும்.
BE.07 ரகசியங்கள்
மேலும் 175 கிலோவாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டு பேட்டரியை 35 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். புதிய மஹிந்திரா BE.07 சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக இருப்பதாகவும், விரைவில் இந்த ரகசியங்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
BE.07 மாடலில் உருவாகும் கார்கள் 4.565 மில்லிமீட்டர் நீளம், 1900 மில்லிமீட்டர் அகலம், 1600 மில்லிமீட்டர் உயரம் இருக்கும். SUV-க்கள் மாடல்களை போன்று இல்லாமல், BE.07 மாடலில் உடயரமான ஸ்டான்ஸ், பிளாட் ரூப்லைன், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், எல்இடி டிஆர்எல்கள், டெயில் லேம்ப்க்லள் ஆகிய சிறப்பம்சங்கள் இருக்கும்.
அக்டோபரில் அறிமுகம்
இந்த புதிய மாடல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலை விட மிகச்சிறந்த மாற்றங்களை கொண்டிருக்கும் என்றும், இந்த எலெக்ட்ரிக் கார் கேபினில் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேக்கள், 12.3 இன்ச் அளவில் மூன்று ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப், ஓடிஏ அப்டேட்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் வழங்கப்படுவதாகவும் மஹிந்திரா & மஹிந்திரா தெரிவித்துள்ளது. மேலும் BE.07 மாடல் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளது.
அனிஷ் ஷா
இந்த புதிய முயற்சி குறித்து மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனிஷ் ஷா கூறுகையில், இந்த புதிய முயற்சியின் வெளிப்படுத்துதல் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது உலகின் மிகச்சிறந்த அமைப்பாக கருதப்படும். மஹிந்திரா & மஹிந்திரா வாடிக்கையாளர்களுக்கு எதிர்கால தொழில்நுட்பம், வடிவமைப்பு, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் தரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
INGLO இயங்குதளம்
மஹிந்திரா & மஹிந்திரா, ஆட்டோ துறையின் செயல் இயக்குனர் ராஜேஷ் ஜெஜூரிகர் கூறுகையில், ‘எதிர்காலத்தில் தயாராக இருக்கும் INGLO இயங்குதளம், இரண்டு புதிய அற்புதமான பிராண்டுகள் மற்றும் ஹார்ட்கோர் வடிவமைப்பு தத்துவம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது. எங்கள் தயாரிப்பு வாகனங்கள் சாலைகளை மின்மயமாக்குவது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள SUV பிரியர்களின் இதயங்களையும் மனதையும் மின்மயமாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
M&M launches new brand BE in the UK, lines up five all-electric vehicles in five years
M&M launches new brand BE in the UK, lines up five all-electric vehicles in five years | வருகிறது BE.. இனி டாடா-வுக்கு போராட்டம் தான்..!