இந்திய வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் ஊழியர்களுக்கு ஏற்ப நிறுவனங்களும் தங்களின் விதிமுறைகளைத் தளர்த்தி வருகிறது.
இந்திய நிறுவனங்களின் இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின் முக்கியமான காரணமும் உண்டு, தற்போது சந்தையில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியிருக்கும் நிலையில் திறமையான ஊழியர்களைத் தக்க வைத்தால் தான் அதிகப்படியான வர்த்தகத்தையும், வருமானத்தையும் ஈட்ட முடியும்.
இதனால் நிறுவனங்களுக்கு ஏற்ப ஊழியர்கள் மாறும் நிலை மலையேறி ஊழியர்களுக்காக நிறுவனங்கள் மாறத் துவங்கியுள்ளது. இப்படி இந்திய நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் தான் இது.
தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்?
5 நாள் மட்டுமே வேலை
இந்தியாவில் தற்போது பெரும்பாலான நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் தற்போது வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை செய்ய விரும்பும் நிலை உள்ளது. இதற்கிடையில் நிறுவனங்கள் 6 நாள் வேலை செய்யக் கூறி வற்புறுத்தினால் வேலையை விடும் நிலை உருவாகியுள்ளது.
நிர்வாகப் பிரிவு ஊழியர்கள்
நிர்வாகப் பிரிவு ஊழியர்களே 6 நாள் வேலையை எதிர்க்கும் நிலையில், அவர்களுக்குக் கீழ் இருக்கும் ஊழியர்களும் 5 நாள் வேலை என்ற பிரிவுக்கு வருகின்றனர். இதனால் நிறுவனங்கள் தற்போது தானாக முன்வந்து 5 நாள் வேலைவாய்ப்புக் கட்டமைப்பை அனைத்துப் பிரிவுகளுக்கு அளிக்கத் துவங்கியுள்ளது.
ஹெச்ஆர் பிரிவு ஊழியர்கள்
இதே நேரத்தில் வாரம் 6 வேலை நாட்கள் கொண்ட நிறுவனங்களில் சேர ஊழியர்கள் விரும்புவது இல்லை, இதனால் இத்தகையை நிறுவனங்களுக்கு ஊழியர்களைத் தேடுவது என்பது பெரிய சவாலாக உள்ளது என ஹெச்ஆர் பிரிவு ஊழியர்களும் புலம்பி வருகின்றனர்.
கடைசி நிலை ஊழியர்கள்
இதேபோல் வாரம் 6 நாள் வேலை நாட்கள் கொண்ட நிறுவனத்தில் சேருவோர் வேலைவாய்ப்புச் சந்தையில் தேர்வாகாமல் கடைசி நிலையில் இருக்கும் ஊழியர்கள் தான் சேர்கின்றனர். இதனால் நிறுவனங்களின் வளர்ச்சியும் தொய்வடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
CXO பிரிவு ஊழியர்கள்
பல முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் CXO பிரிவில் ஊழியர்களைத் தேடும் போது வாரத்தில் 6 நாள் வேலை என்ற விதிமுறையைக் கேட்டாலே நிறுவனங்களை நிராகரித்து வருகின்றனர். டிஜிட்டல் மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் 5 நாள் மட்டுமே வேலைநாட்களாகக் கொண்டு உள்ளது.
விரைவில் மாற்றம்
ஆனால் உற்பத்தி, இன்பராஸ்டக்சர், எனர்ஜி போன்ற பல துறையில் 5.5 நாட்கள் 6 நாட்களை நிரந்தர வேலை நாட்களாகக் கொண்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பரிந்துரை செய்து வருகிறது. அடுத்தச் சில ஆண்டுகளில் இந்தியாவில் 90 சதவீத நிறுவனங்கள் வாரத்தில் 5 வேலை நாட்களை நிரந்தரமாக்கும்.
CXO not interested in 6 working days; Companies changing policy for 5 working days
CXO’s not interested in 6 working days; Companies changing policy for 5 working days 5 நாள் வேலை செய்ய முடியும்.. ஊழியர்கள் கெடுபிடி, வழிக்கு வரும் நிறுவனங்கள்..!