பச்சிளம் குழந்தை உட்பட ஐவர்… வாகன சாரதியின் கொடுஞ்செயல்: ஜேர்மனியில் சம்பவம்


விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதில் நிம்மதி

அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ தூண்டப்பட்டதாக பொலிசார் கருதவில்லை என அதிகாரிகள்

பச்சிளம் குழந்தை உட்பட ஐந்து பாதசாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலைக்கு காரணமான ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 டிசம்பரில் நடந்த குறித்த தாக்குதலில் ஒன்பது வார குழந்தையும், அவளது 45 வயது தந்தையும், 25 முதல் 73 வயதுடைய மூன்று பெண்களும் கொல்லப்பட்டனர்.

பச்சிளம் குழந்தை உட்பட ஐவர்... வாகன சாரதியின் கொடுஞ்செயல்: ஜேர்மனியில் சம்பவம் | German Man Speeding Car Killing Five

@AFP

மேலும் பலர் காயமடைந்தனர்.
தற்போது 52 வயதாகும் குறித்த சாரதி சம்பவத்தின் போது மது போதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அவர் மனநல சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதில் நிம்மதி என குறிப்பிட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.
குற்றவாளியான பெர்ன்ட் இனிவரும் நாட்களில் உளவியல் காப்பகத்தில் அல்லது சிறையில் தங்கவைக்கப்படுவார் என்றே கூறுகின்றனர்.

பச்சிளம் குழந்தை உட்பட ஐவர்... வாகன சாரதியின் கொடுஞ்செயல்: ஜேர்மனியில் சம்பவம் | German Man Speeding Car Killing Five

@AFP

தொடர்புடைய சாரதி மீது ஐந்து பிரிவுகளில் கொலை வழக்கும் 18 கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டிருந்தது.
ஆனால் அவர் உளவியல் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தவர் எனவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது இது வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக பொலிசார் நம்பினர், ஆனால் அரசியல் ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ தூண்டப்பட்டதாக பொலிசார் கருதவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 13.45 மணிக்கு பாதசாரிகள் மீது தமது வாகனத்தை மோதிச் சென்ற அந்த நபரை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இச்சம்பவம் 110,000 மக்கள் குடியிருக்கும் மேற்கு ஜெர்மனியின் ட்ரையர் நகரை மொத்தமாக உலுக்கியது.

பச்சிளம் குழந்தை உட்பட ஐவர்... வாகன சாரதியின் கொடுஞ்செயல்: ஜேர்மனியில் சம்பவம் | German Man Speeding Car Killing Five

@AFP

கொரோனா பரவல் காரணமாக இப்பகுதியில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் சந்தை ரத்து செய்யப்பட்டிருந்தது, ஆனால் கடைகள் திறந்திருந்தன.
சம்பவத்தின் போது சந்தை செயல்பட்டிருந்தால், இறப்பு எண்ணிக்கை அதிகரிகரித்திருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளனர்.

2016ல் இதுபோலவே, பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் லொறியை மோதவிட்டு சாரதி ஒருவர் 12 பேர் கொல்லப்பட காரணமானார். டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.