லாட்டரியில் பரிசு கிடைக்க வேண்டுமென்றால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைத்து கொண்டிருப்போம்.
ஆனால் லாட்டரியில் ஒரு கணிதம் உள்ளது என்றும் லாட்டரியில் எந்த எண்களுக்கு பரிசு விழும் என்பதை கணிக்க முடியும் என்றும் ஓய்வு பெற்ற வயதான தம்பதிகள் நிரூபித்துள்ளனர்.
இவர்கள் சுமார் 23 மில்லியன் டாலர்கள் லாட்டரி மூலம் தட்டி தூக்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாதம் ரூ.2 லட்சம் வருமானம்.. ஆட்டோ-வை பீட்சா ஹப் ஆக மாற்றிய மொஹபத் தீப் சிங்..!
லாட்டரி சீட்டு
லாட்டரி சீட்டு வாங்குபவர்களுக்கு அந்த லாட்டரி சீட்டுகளின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய புரிதல் எதுவும் இருக்காது. ஆனால் அனைத்து வகையான லாட்டரிகளிலும் புத்திசாலித்தனமான யூகங்கள் மற்றும் கணிதங்கள் இருந்தால் பம்பர் லாட்டரிகளை தொடர்ச்சியாக வெல்ல முடியும் என்று வயதான தம்பதிகள் நிரூபித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற தம்பதிகள்
மிக்சிகன் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தம்பதிகளான ஜெர்ரி மற்றும் மார்ஜ் செல்பீ லாட்டரி சீட்டுகளை கணிதத்தின் மூலம் பரிசுகளை வெல்லலாம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர். இதுவரை இவர்கள் 23 மில்லியன் பவுண்டுகளை வென்று உள்ளதாக கூறப்படுகிறது.
லாட்டரி சீட்டுகளில் கணிதம்
லாட்டரி சீட்டுகளில் கணிதத்தை இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி உள்ளனர். இதனால் இவர்களுக்கு தொடர்ச்சியாக லாட்டரி பரிசுகள் கிடைத்து கொண்டே இருந்தது. 2003 ஆம் ஆண்டு தங்களது வியாபாரத்தை நிறுத்தி விட்ட இந்த தம்பதிகளின் கவனம் லாட்டரி சீட்டின் பக்கம் திரும்பியது.
அதிர்ஷ்டம் மற்றும் கணிதம்
அதிர்ஷ்டம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டும் இவர்களுக்கு ஒத்துழைத்தால் இவர்களுக்கு தொடர்ச்சியாக பரிசுகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஜெர்ரி, லாட்டரியில் உள்ள டெக்னிக்கை புரிந்துகொள்ள முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஏனெனில் பல லாட்டரி சீட்டுக்களின் முடிவுகளை ஆய்வு செய்த பின்னர் அவை அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லாட்டரியில் பணம்
ஜாக்பாட் லாட்டரியை பொருத்தவரை ஐந்து மில்லியன் டாலர் லாட்டரி சீட்டுக்கு ஆறு எண்கள் சரியாக பொருந்த வேண்டும். அவ்வாறு யாருக்கும் சரியாக பொருந்தவில்லை என்றால் நான்கு அல்லது ஐந்து எண்கள் பொருந்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் அந்த பரிசை வெல்வதற்கு ஜெர்ரியின் கணிதம் வெறும் ஐந்து நிமிடங்களுக்கு குறைவாக உள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும்.
லாட்டரி சீட்டின் கணிதம்
அதன்பின்னர் தங்களுடைய கணித அறிவால் இந்த வயதான தம்பதிகள் பல லாட்டரி பரிசுகளை வென்றுள்ளதாகவும் அவர்களுக்கு லாட்டரி சீட்டின் கணிதம் வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திரைப்படம்
லாட்டரி சீட்டு மூலம் பல மில்லியன்களை வென்ற ஜெர்ரி மற்றும் மார்ஜ் செல்பீ வாழ்க்கை வரலாறு ஹாலிவுட்டில் ஒரு திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘ஜெர்ரி & மார்ஜ் கோ லார்ஜ்’ என்ற டைட்டிலில் உருவான இந்த படத்தில் ‘பிரேக்கிங் பேட்’ நட்சத்திரம் பிரையன் க்ரான்ஸ்டன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
This retired couple won $23m after ‘cracking’ lottery code!
This retired couple won $23m after ‘cracking’ lottery code! | 23 மில்லியன் டாலர் லாட்டரி.. திட்டம் போட்டு தூக்கிய முதியவர்..!