திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிர குளத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ரத்ததான கழக நிறுவனர் புதுக்குடி எம்.எஸ்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில்
தலைமையிலான அரசு வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதன்மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் 10.5 சதவீத இட ஒதுக்கிட்டை பெற்றனர். ஆனால் 108 சமூக மக்களின் கெட்ட பெயரை எடப்பாடி பழனிசாமி சம்பாதித்துக் கொண்டார்.
அவர்கள் அனைவரும் எதிராக திரும்பினர். சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
மீது வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன. இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி தேவர் குருபூஜை வரவுள்ளது. இதுவரை ஓ.பன்னீர்செல்வம் தான் வங்கியில் கையெழுத்து போட்டு தங்க கவசத்தை அளித்துள்ளார். அதேபோல் நடப்பாண்டும் அவரே வங்கியில் கையெழுத்து போட்டு தங்க கவசத்தை வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
இந்த சூழலில் தேவர் குருபூஜை அன்று தேவருக்கு தங்க கவசம் போடாமல் இருப்பதற்காக எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்திருக்க முடியாது. அவர் எப்படி பதவியை வாங்கினார் என்று அனைவருக்கும் தெரியும் என்றார். மேலும் பேசுகையில், தமிழகத்தில் உள்ள முக்குலத்தோர் சமூகத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
இத்தகைய நிலைப்பாடு தொடர்ந்து கொண்டிருப்பதால், அவர் தென் மாவட்டங்களுக்கு வர முடியாது. அப்படியே வந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் எடப்பாடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம். முக்குலத்தோர் சமூகத்தினர் தென் மாவட்டங்களுக்குள் எடப்பாடி பழனிசாமியை விட மாட்டார்கள் என்று தெரிவித்தார். இது எடப்பாடி தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அதிமுகவில் முக்கியத்துவம் பெற்று விளங்கிய முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என வரிசையாக நீக்கப்பட்டு விட்டனர். அவர்களது தென் மண்டல ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டதால் அந்த சமூகத்தினர் எடப்பாடி தரப்பு மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். தற்போதைய அதிமுகவை பொறுத்தவரை கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்களுக்கே எடப்பாடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இதனால் தெற்கு அவருக்கு எதிராக திரும்பி நிற்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது. இவர்களை சரிகட்ட எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து வியூகங்கள் வகுத்து செயல்பட்டாலும் பெரிதாக எடுபடவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் முக்குலத்தோர் சமூகத்தினரிடம் இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பு எடப்பாடி தரப்பிற்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.