இன்றும் குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்றும் சர்வதேச சந்தையில தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து இன்றும் 1800 டாலர்களுக்கு கீழாக காணப்படுகிறது.

டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்று நடக்கவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தங்கம் விலையானது தற்போது வரையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இதில் மீண்டும் வட்டி அதிகரிப்பு குறித்தான முக்கிய முடிவுகள் வெளியாகுமா? ரெசசனை கருத்தில் கொண்டு வட்டி அதிகரிக்கப்படாமல் இருக்குமா? என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்?

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

ஆக ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவினை பொறுத்து தங்கம் விலையானது மாற்றம் காணலாம் என்ற நிலையில், தற்போது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. கடந்த வாரங்களில் டாலரின் மதிப்பு வலுவிழந்திருந்த நிலையில், அது தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

பத்திர சந்தையும் ஏற்றம்

பத்திர சந்தையும் ஏற்றம்

அமெரிக்க பத்திர சந்தையும் தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து அமெரிக்காவின் மத்திய வங்கியானது 225 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதியக்ரித்துள்ளது. இது இன்னும் 50 அல்லது 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் VS தங்கம்
 

பணவீக்கம் VS தங்கம்

தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக இருந்து வரும் நிலையில் அதுவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் வரவிருக்கும் நாட்களில் வரவுள்ள வீடு விற்பனை உள்ளிட்ட முக்கிய தரவுகள் வெளியாகவுள்ளன. இது தவிர வரவிருக்கும் உற்பத்தி குறித்தான தரவுகள் என பலவும் வெளியாகவுள்ளன.

 சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. வெள்ளி விலையும் சற்று குறைந்து தான் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

தங்கம் விலையானது தற்போது இந்திய சந்தையில் கேப் டவுன் ஆகி 10 கிராமுக்கு 513 ரூபாய் குறைந்து, 52,072 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் கிலோவுக்கு 1211 ரூபாய் குறைந்து, 58,065 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையும் குறைந்து காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து தான் காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 4849 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து, 38,792 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 5271 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,008 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து, 52,710 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா குறைந்து, 63.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 633 ரூபாயாகவும், இதுவே 100 ரூபாய் கிலோவுக்கு 63,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று – ரூ.48,540

மும்பை – ரூ.47,990

டெல்லி – ரூ.48,140

பெங்களூர் – ரூ.48,040

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,540

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 17th August 2022: Gold prices flat await cues from US federal reserve policy meeting

gold price on 17th August 2022: Gold prices flat await cues from US federal reserve policy meeting/ இன்றும் குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

Story first published: Wednesday, August 17, 2022, 11:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.