இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத நிலையிலும், புதிய கடன்களைப் பெற முடியாமலும் இருக்கும் இந்த வேளையில், நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டின் அரசு புதிய முதலீடுகளுக்குச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்று வருகிறது.
குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான வரவேற்பு அளித்து வரும் இலங்கை அரசுக்கு இந்திய நிறுவனங்களும், இந்தியாவின் முதலீடுகளும் முக்கியமானதாக விளங்குகிறது.
இந்த நிலையில் இலங்கையில் முக்கியமான திட்டத்தை இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானி-யின் அதானி கிரீன் கைப்பற்றியுள்ளது.
அதானி-யின் ஷாப்பிங்.. 835 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட குஜராத் நிறுவனம்..!
இலங்கை
இலங்கையில் இரண்டு காற்றாலை திட்டங்களில் சுமார் 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மற்றும் பூனேரியில் உள்ள இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முதலீடு செய்யவும் கட்டமைக்கவும் ஒப்புதல்கள் என்று காஞ்சன விஜேசேகர ட்வீட் செய்துள்ளார்.
காஞ்சன விஜேசேகர
இதுகுறித்து காஞ்சன விஜேசேகரப் பதிவிட்ட ட்வீட்-ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கச் சிலோன் மின்சார வாரியம் மற்றும் Sustainable Development Authority பிரிவின் அதிகாரிகள் உடன் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மன்னார், பூனேரி
இக்கூட்டத்தில் இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு மன்னார் பகுதியில் 286 மெகாவாட் காற்றாலை திட்டத்திற்கும், மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட 2வது காற்றாலை திட்டங்களில் சுமார் 500 மில்லியன் டாலர் முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என டிவீட் செய்துள்ளார்.
மின்சாரத் தட்டுப்பாடு
இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையில் பெரும் பிரச்சனையாக இருக்கும் மின்சாரத் தட்டுப்பாடு கணிசமாகக் குறைவது மட்டும் அல்லாமல் தற்போது ஒப்புதல் அளிக்கப்படும் பிற திட்டங்கள் மூலம் உபரி மின்சாரம் அந்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும்.
முக்கியப் பிரச்சனை
இலங்கை அதிகமாகப் பாதிக்கப்படுவது எரிபொருள், மின்சாரத் தட்டுப்பாட்டில் தான். இவ்விரண்டையும் சேமிக்கப் பள்ளிகள் கல்லூரிகள் கூட மூடப்பட்டது இலங்கையின் சோகத்தின் உச்சம், மேலும் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் பல வழிகளில் இலங்கைக்கு உதவி வரும் வேளையில் அதானி கிரீன் நிறுவனம் முக்கியமான திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் மற்றொரு நிறுவனமான அதானி போர்ட்ஸ் இலங்கையின் கொழும்பில் டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகங்களையும் உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவதாகக் காற்றாலை திட்டத்தையும் கைப்பற்றியுள்ளது.
Sri Lanka govt approves $500 million wind projects to Adani Green Energy, after colombo Port
Sri Lanka govt approves $500 million wind projects to Adani Green Energy, after colombo Port கௌதம் அதானி-யின் அடுத்த டார்கெட் இலங்கை.. 500 மில்லியன் டாலர் முதலீடு.. 2வது திட்டம் ஒப்புதல்..!